எல்ஜி வி20 : ஆச்சரியப்படுத்தும் ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.0 மற்றும் பல..!
எல்ஜி நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான வி20-யை சமீபத்திய நிகழ்வொன்றில் அறிமுகம் செய்தது. எல்ஜி வி20 ஆனது கூகுளின் சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஆன நௌக்கட் 7.0 கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீ 20 ஆனது ஒரு இரட்டை கேமரா அமைப்பு மற்றும் இரண்டாம் டிஸ்ப்ளேவை தனது மேல்பக்கத்தில் கொண்டுள்ளது. இந்த இரண்டு அம்சமும் இந்த ஆண்டு மாடலில் உள்ள முக்கியமான மேம்படுத்தல்கள் ஆகும். இதன் முந்தைய வெர்ஷன் வி10 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இதன் கேமிராக்கள் அதிக திறன் கொண்டவைகளாகவும், இரண்டாம் நிலை டிஸ்ப்ளே ஆனது அதிக வெளிச்சம் கொண்டதாகவும், முன்பை விட பெரிய எழுத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும்.

முக்கியமாக இசை பிரியர்களை மிகவும் கவரும் வண்ணம் இதன் ஹெட்செட்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வி20-ன் மேலும் பல சிறப்பம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
டிஸ்ப்ளே : 5.7 இன்ச்
ரேம் : 4ஜிபி
ப்ராசஸர் : குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 செயலி
பேட்டரி : 3200எம்ஏஎச் ரீமூவபில்
ஆடியோ பார் மட்கள் : எஃப்எல்ஏசி, டிஎஸ்டி ,ஏஐஎப்எப் மற்றும் ஏஎல்ஏசி


Click it and Unblock the Notifications