இனி இந்த தயாரிப்பும் இந்தியாவில்- எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏசி உற்பத்தி தொடக்கம்: நமக்கு நன்மை தான்!

|

இந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்டாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள நொய்டா ஆலையில் எல்ஜி இரட்டை இன்வெர்ட்டர் விண்டோ ஏர் கண்டிஷனர்கள் உற்பத்தி செய்யத் தொடங்கப்பட்டிருக்கிறது. எல்ஜி விண்டோ இன்வெர்ட்டர் ஏசி ஆனது ரூ.39,990 முதல் தொடங்குகிறது. இதன்மூலம் எள்ஜி மேக் இன் இந்தியா தயாரிப்பு வரிசையில் தங்கள் சந்தை பங்கை மேலும் அதிகரிக்கச் செய்ய இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் 300,000 யூனிட் ஜன்னல் ஏர் கண்டிஷனர்களை உற்பத்தி செய்யும் திறனுடன் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு செய்யும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏர் கண்டிஷனர்

எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏர் கண்டிஷனர்

எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏர் கண்டிஷனர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆற்றல் திறன் கொண்ட தேர்வாக இருந்த வருகிறது. மேலும் LG ThinQ உடன் பொருத்தப்பட்டிருக்கும் 5 ஸ்டார் சாளர ஏர் கண்டிஷனர்களில் இருக்கும் அம்சங்களை இது வழங்குகிறது. பயனர்கள் வீட்டில் இல்லாத போதும் தொலைவில் இருந்தபடி ஸ்மார்ட்போன்கள் மூலம் இவைகளை கட்டுப்படுத்த இது அனுமதிக்கிறது.

4 இன் 1 கன்வெர்டபிள் மோட்

4 இன் 1 கன்வெர்டபிள் மோட்

ஏர் கண்டிஷனர்கள் வாடிக்கையாளர்களின் வசதிகளை மேம்படுத்தி வழங்குகிறது. இது 5 ஸ்டார் ஆற்றல் திறன் கொண்ட ஏர் கண்டிஷனர்கள், டூயல் இன்வெர்ட்டர் கம்ப்ரசர் மற்றும் 4 இன் 1 கன்வெர்டபிள் மோட் மூலம் பயனரின் தேவைக்கேற்ப குளிர்ச்சியை மேம்படுத்தி வழங்குகிறது. சீரான குளிரூட்டலுக்கு என டாப் ஏர் டிஸ்சார்ஜ் மற்றும் சுத்தமான ஃபில்டர் ஆனது ஒவ்வொரு முறையும் புதிய மற்றும் சுத்தமான காற்றை வழங்குவதற்கு உறுதியான தன்மையைக் கொண்டிருக்கிறது.

பிரதான பயன்பாடாக மாறும் ஏசி

பிரதான பயன்பாடாக மாறும் ஏசி

கோடைக் காலத் தாக்கத்தில் நம்மை சற்று இளைப்பாற செய்வது ஏசி தான். ஏசி தற்போது பலரின் வீடுகளிலும் பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. ஸ்மார்ட்போன், டிவி போன்ற பிரதான பயன்பாட்டு சாதனங்களின் வரிசையில் ஏசியும் இணைகிறது. வெப்பத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிட்டாலும், கரண்ட் பில் என்ற அடுத்த மோசமான பிடியில் நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள். குறிப்பாக ஏசியை அதிகமாகப் பயன்படுத்துகிறீர் என்றால், நிச்சயமாக மாத இறுதியில் உங்கள் கரண்ட் பில் 270 யூனிட் முதல் 500 யூனிட்களை தாண்டி, உங்கள் பாக்கெட் பணத்தைச் சூறையாடிவிடும். புதிய AC வாங்கும் முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து ஏசி வாங்கினால், உங்களின் கரண்ட் பில் கம்மியாக வாய்ப்புள்ளது.

சாதனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சாதனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில், வீட்டுக்குத் தேவையான குளிரூட்டும் சாதனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, கோடைக்காலத்தில் மட்டும், டெல்லியில் இருக்கும் ஒரு மின் மயமாக்கப்பட்ட வீடு மாதத்திற்குச் சராசரியாக 250 முதல் 270 யூனிட் அல்லது கிலோவாட் மின்சாரம் வரை பயன்படுத்துகிறது என்று லாயிட் தலைமை நிர்வாக அதிகாரி சஷி அரோரா தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏசிகள்

இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏசிகள்

இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏசிகள் உங்கள் அறையின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகின்றது. அதே நேரத்தில் இவை வெளிப்புற வெப்பக் காற்றிலிருந்து அறையின் தனிமைப்படுத்தலைப் பொறுத்துக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துகின்றது. மோட்டார் வேகம் மற்றும் கம்ப்ரெஸ் வேகத்தைத் தானாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஏர் கண்டிஷனர்களின் தேவையற்ற செயல்பாடுகளை இது அகற்றுகிறது. இதனால் மின்சாரம் மிச்சமாகிறது. நார்மல் on /off ஏசி உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது.

5 ஸ்டார் மதிப்பீடு

5 ஸ்டார் மதிப்பீடு

ஏறக்குறைய ஒவ்வொரு பிராண்டட் ஏர் கண்டிஷனரும் 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. வழக்கமான ஏசிகள் அல்லது உள்நாட்டில் கூடியிருக்கும் ஏசிகளுடன் ஒப்பிடும்போது, அதிக ஸ்டார் மதிப்பீடுகளைக் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் தான் குறைந்த சக்தியைப் பயன்படுத்துகின்றது. உங்கள் ஏசியில் உள்ள ஸ்டார் எண்ணிக்கை அதிகரித்தால் உங்கள் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என்பது தான் உண்மை. இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வரும் ஏசி வழக்கமான ஏர் கண்டிஷனரை விட 30 முதல் 35 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Going to Start Manufacturing LG Dual Inverter Window Air Conditioners in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X