முதல் பார்வை: எல்ஜி ஜி6.!

தற்போது நடைபெற்று வரும் எம்டபுள்யூசி மாநாட்டில் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

By Ilamparidi
|

பார்சிலோனாவில் தற்போது நடைபெற்று வரக்கூடிய மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியாகக்கூடிய தகவல்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் அனைவரையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்றால் அது மிகையல்ல.

அதற்கான காரணம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தமது புதிய தயாரிப்புகளை பல்வேறு நவீன அம்சங்களுடன் அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.ஸ்மார்ட்போன் ஆர்வலர்களும் எந்த மொபைலை வாங்குவதென தெரியாமல் ஆச்சரிய குழப்பத்தில் உள்ளனர்.

அந்தவகையில்,தற்போது எல்ஜி நிறுவனம் தமது எல்ஜி ஜி6 னை வெளியிட்டுள்ளது.அதன் அம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் கீழே.

எம்டபுள்யூசி-மொபைல் திருவிழா:

எம்டபுள்யூசி-மொபைல் திருவிழா:

பார்சிலோனாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய எம்டபுள்யூசி மாநாடானது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை தூண்டியுள்ளது.அதற்கான காரணம் நமது கிராமங்களில் ஆண்டிற்கு ஓர் முறை நடைபெறும் திருவிழாவினைப்போல,அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் ஓர் இடத்தில் கூடி தமது புதிய தயாரிப்புகளை போட்டி போட்டு அறிவித்து வருகின்றன.

எல்ஜி ஜி6:

எல்ஜி ஜி6:

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாடானது துவங்குவதற்கு முன்பிலிருந்தே எல்ஜி யின் அடுத்த ஸ்மார்ட்போன் தயாரிப்பான அதன் எல்ஜி ஜி6 குறித்தும்,அது இத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடும் எனவும் பலதகவல்கள் அதிகாரப்பூர்வமில்லாதவகையில் பரவிவந்தன.சமீபகாலமாக ஸ்மார்ட்போன் சந்தையில்,அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று.

அம்சங்கள்:

அம்சங்கள்:

எல்ஜி ஜி 6 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்,நியூ யுஎக்ஸ் 6.0,5.7 இன்ச் முழு விஷன் டிஸ்பிளே,கியூஎச்டி 1440x2880 பிக்செல்ஸ்,564 பிபிஐ பிக்செல் அடர்த்தி,குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 821 எஸ்ஓசி,எல்பிடிடிஆர் 4ஜிபி ரேம்,32/64 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளியிட்ட வசதிகளுடன் வெளிவருகிறது.

கேமரா:

கேமரா:

எல்ஜி ஜி 6 ஆனது இரு மெயின் கேமராக்களைக் கொண்டு வெளிவருகிறது.சென்ஸாருடன் கூடிய 13 எம்பி-125 டிகிரி லென்ஸ்,எப்/2.4 அபெர்சர் ஆகியவற்றினைக் கொண்டு ஓர் கேமராவும்,71 டிகிரி லென்ஸுடன் மற்றுமோர் மெயின் கேமராவும் அமைந்துள்ளது.5 எம்பி முன்பக்க கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஐபி68 சான்று பெற்ற நீர் மற்றும் தூசு ரெசிடன்ஸ் அம்சம் உள்ள 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது எல்ஜி ஜி6.வை பை 802.11 ப்ளூடூத் வெர்ஷன் 4.2,என்எப்சி யூஎஸ்பி வகை-சி 2.0,எல்டிஇ ஏ3 வகை நெட்ஒர்க் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியோமியின் அடுத்த அதிரடி 'சியோமி ரெட்மி 4' மேட் ப்ளாக்-இந்தியாவில் இன்று முதல்.!

Best Mobiles in India

English summary
LG G6 First Look.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X