Home
News

எல்.ஜி ஜி வாட்ச் ஆர் ஸ்மார்ட்வாட்ச் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சாம்சசங் ஸ்மார்ட் வாட்ச்களோடு நேரடியாக போட்டியிட ஜூன் மாதம் எல்.ஜி நிறுவனம் ஜி ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தியது. இரண்டு மாத இடைவெளிக்கு பின் எல்.ஜி நிறுவனம் ஜி வாட்ச் ஆர் மாடலை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் மோட்டோரோலாவின் மோட்டோ 360 வெளியாவதற்கு முன் தன் இரண்டாவது ஸ்மார்ட் வாட்சை எல்.ஜி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்.ஜி ஜி வாட்ச் ஆர் ஸ்மார்ட்வாட்ச் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

வடிவமைப்பு மற்றும் மென்பொருளை பொருத்த வரை மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை விட தனித்து நிற்கிறது ஜி வாட்ச் ஆர். இந்த வாட்ச் ஆன்டிராய்டு வியர் ப்ளாட்பார்ம் மூலம் இயங்குகிறது என்பதோடு வட்ட வடிவ டிஸ்ப்ளே மற்றும் 320*320 பிக்சல் ரிசல்யூஷனில் இயங்குகிறது எல்.ஜி ஜி வாட்ச் ஆர்.

ஜி வாட்ச் ஆர் ஸ்மார்ட் வாட்சில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் 512 எம்பி ராம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. டியுரபல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், மாற்றக்கூடிய லெதர் ஸ்ட்ராப் இதன் மொத்த பார்வை மற்றும் உபயோகிப்பதையும் எளிதாக்குகிறது. இதன் விலை இன்னும் தெரியப்படவில்லை என்றாலும் இதன் வடிவமைப்பு மோட்டோ 360, சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
LG G Watch R Smartwatch Launched with Circular Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X