வளைந்த டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி ஸ்மார்ட்போன் ரூ.55,000

By Meganathan
|

எல்ஜி நிறுவனம் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டது. எல்ஜி ஜி ப்ளெக்ஸ்2 என்ற இந்த ஸ்மார்ட்போன் ரூ.55,000 என நிர்ணயக்கப்பட்டுள்ளதோடு இம்மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைந்த டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி ஸ்மார்ட்போன் ரூ.55,000

எல்ஜி ஜி ப்ளெக்ஸ்2 குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் கொண்டுள்ளதோடு Adreno 430 GPU மற்றும் 2ஜிபி LPDDR4 ராமும் கொண்டிருக்கின்றது. சிங்கிள் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் வளைந்த P-OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

கேமராவை பொருத்தவரை 13.0 எம்பி ப்ரைமரி கேமராவும் 2.1 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 16 மற்றும் 32 ஜிபி மெமரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி கார்டு மூலம் மெமரியை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. 4ஜி LTE-A, HSPA+, வைபை 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 4.1, NFC, GPS/ A-GPS, GLONASS, மற்றும் யுஎஸ்பி 2.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் 3000 எம்ஏஎஹ் பேட்டரியும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
LG has launched its second-generation curved display smartphone in India, the G Flex2, priced at Rs. 55,000.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X