உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட் OLED டிவியை அறிமுகம் செய்த LG.. இது எவ்வளவு பெரியது தெரியுமா?

|

மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தொழில்நுட்ப சாதனமாக மாறிய சாதனங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதை விட மிகப் பெரிய பங்கு டிவிகளுக்கு உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள் கூட சிலர் இருக்கலாம், ஆனால் வீட்டில் டிவி இல்லாமல் எந்தவொரு குடும்பமும் இருக்காது. மனிதனின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக வீட்டில் இருப்பவர்களுக்குத் துணையாய் இருப்பது டிவி மட்டும் தான். முதலில் பிளாக் அண்ட் வைட் டிவிகளில் துவங்கிய இதன் சரித்திரம், இப்போது ஸ்மார்ட் டிவிகளாக மாறி, வீட்டிற்குள் தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது.

உலகளவில் ஸ்மார்ட் டிவிக்கான தேவை அதிகரித்துவிட்டதா?

உலகளவில் ஸ்மார்ட் டிவிக்கான தேவை அதிகரித்துவிட்டதா?

உலகளவில் இப்போது ஸ்மார்ட் டிவிக்கான தேவை அதிகரித்துவிட்டது. உங்கள் ஸ்மார்ட்போன் போல இப்போது ஸ்மார்ட் டிவிகளும் உங்கள் தேவைக்கேற்ப ஸ்மார்ட்டாக செயல்படத் துவங்கிவிட்டன. இப்போது ஸ்மார்ட் டிவிகள் 4K மற்றும் 8K தரத்தில் மிக துல்லியமான காட்சி அனுபவத்தை வழங்குவதோடு, ஹாம் தியேட்டர் ஆடியோ தரம், மிரர் காஸ்டிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் என்று ஏராளமான அம்சங்களுடன் வெளிவந்து கொண்டே இருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றக் காரணமாக ஸ்மார்ட் டிவிகள் மேன்மேலும் அதிநவீனமாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய OLED டிவியை LG அறிமுகம் செய்துள்ளதா?

உலகின் மிகப்பெரிய OLED டிவியை LG அறிமுகம் செய்துள்ளதா?

பிரீமியம் டிவி சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் செவ்வாயன்று (இன்று) லாஸ் வேகாஸில் நடந்த நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் (CES) உலகின் மிகப்பெரிய OLED டிவியை உள்ளடக்கிய 2022 டிவி வரிசையை வெளிபடுத்தியுள்ளது. ஆம், சரியாக தான் படித்தீர்கள், உலகின் மிகப் பெரிய ஓஎல்இடி ஸ்மார்ட் டிவி மற்றும் மிகச் சிறிய ஓஎல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதன் அளவு எவ்வளவு பெரியது தெரியுமா?

9 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்.. சென்னையில் கூட புல்லட் ரயில் சேவையா?9 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்.. சென்னையில் கூட புல்லட் ரயில் சேவையா?

உலகின் மிகப் பெரிய மற்றும் சிறிய OLED டிவியின் அளவு என்ன தெரியுமா?

உலகின் மிகப் பெரிய மற்றும் சிறிய OLED டிவியின் அளவு என்ன தெரியுமா?

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் தற்போது அறிமுகம் செய்துள்ள உலகின் மிகப் பெரிய OLED டிவி மாடலானது 97' இன்ச் அளவில் இப்போது நடைபெறும் CES 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 42' இன்ச் கொண்ட சிறிய OLED டிவி மாடல்களையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட பேனல் OLED evo ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட படத் தரம் மற்றும் அல்ட்ரா ரியலிஸ்டிக் படங்களுக்கு அதிக பிரகாசத்தை வழங்குகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.

புதிய OLED evo வரிசையில் 97 இன்ச் கேலரி எடிஷன்

புதிய OLED evo வரிசையில் 97 இன்ச் கேலரி எடிஷன்

வாடிக்கையாளர் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய OLED evo வரிசையைக் கடந்த ஆண்டு மூன்று மாடல்களுடன் ஒப்பிடுகையில், வெவ்வேறு அளவுகளில் சுமார் 11 மாடல்களுக்கு விரிவுபடுத்துவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது, "ஓஎல்இடி டிவிகளில் பிரீமியம் தரம் மற்றும் வடிவமைப்பில் இல்லாத வகையில், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்குவோம். அடுத்த தலைமுறை டிவி சந்தையை வழிநடத்துவோம்." என்று எல்ஜியின் ஹோம் என்டர்டெயின்மென்ட் தலைவர் பார்க் ஹியோங் தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் வீணாகிறதா? இப்படி செஞ்சு பாருங்க.. பணமும் வீணாகாது பயணமும் செய்யலாம்..ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் வீணாகிறதா? இப்படி செஞ்சு பாருங்க.. பணமும் வீணாகாது பயணமும் செய்யலாம்..

70 இன்ச் அல்லது அதற்கும் மேலான பெரிய திரைகளுக்கு அதிக மவுசா?

70 இன்ச் அல்லது அதற்கும் மேலான பெரிய திரைகளுக்கு அதிக மவுசா?

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நுகர்வோர் அதிக நேரம் டிவி பார்ப்பதால் உயர்தர தொலைக்காட்சிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக பார்க் மேலும் கூறியுள்ளார். இதைக் கருத்தில் கொண்டு எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓஎல்இடி டிவிகள் மற்றும் 70 இன்ச் அல்லது பெரிய திரைகள் கொண்ட டிவிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், அதிகமான நுகர்வோர் அதிக OTT சேவைகளில் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள் மற்றும் அவர்களின் கண்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார்கள்.

செல்ப் எமிட்டிங் குவாண்டம் டாட் (QD) டிஸ்ப்ளே

செல்ப் எமிட்டிங் குவாண்டம் டாட் (QD) டிஸ்ப்ளே

இந்த அனுபவத்தை மேம்படுத்த நுகர்வோர், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் பெரிய டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்க முயல்கின்றனர். இதை அறிந்த சாம்சங் நிறுவனம் கூட, ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இந்த ஆண்டு OLED சந்தையில் மீண்டும் நுழையும் வாய்ப்பையும் LG வரவேற்கிறது என்று நிறுவன தலைவர் கூறியுள்ளார். சாம்சங் இந்த வாரம் CES இல் செல்ப் எமிட்டிங் குவாண்டம் டாட் (QD) டிஸ்ப்ளேக்கள் மற்றும் OLED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அதன் புதிய டிவி தயாரிப்புகளைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தை பாராட்டிய எல்ஜி

சாம்சங் நிறுவனத்தை பாராட்டிய எல்ஜி

"ஓஎல்இடி டிவி சந்தையில் சாம்சங் நுழைவதைப் பற்றி நாங்கள் அதிகாரப்பூர்வமாக எதுவும் கேட்கவில்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தால், நாங்கள் வரவேற்க வேண்டிய ஒன்று" என்று பார்க் CES 2022 நிகழ்வில் கூறியுள்ளார். இந்த தகவலைத் தொடர்ந்து CES 2022 நிகழ்வில் சாம்சங் நிறுவனம் இப்போது மைக்ரோ எல்இடி, நியோ கியூஎல்இடி மற்றும் லைஃப் ஸ்டைல் ​​மாடல்களை சிஇஎஸ் 2022-இல் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் குறிப்பாக இந்த புதிய டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டு உருவாக்கியுள்ளது என்று சாம்சங் நிறுவனம் நிகழ்வின் போது கூறியுள்ளது.

 கேம் ஸ்ட்ரீமிங் சேவையை ஆதரிக்கும் புதிய டிவிகள்

கேம் ஸ்ட்ரீமிங் சேவையை ஆதரிக்கும் புதிய டிவிகள்

குறிப்பாக, சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த சாதனங்களைக் கொண்டுவந்துள்ளதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த டிவி மாடல்கள் Nvidia GeForce Now, Stadia மற்றும் Utomik போன்ற கேம் ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய கேமிங் அம்சத்துடன் வருகிறது. ஈ உங்கள் ஸ்மார்ட் டிவி உயர் திறன் எச்டி கேமிங்கை லேக் இல்லாமல் விளையாட அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
LG Electronics Unleashes Worlds Biggest New OLED TV With 97 Inch Model : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X