6 ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் LG.. எப்போது பயன்பாட்டிற்கு கிடைக்குமென்று தெரியுமா?

|

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செவ்வாயன்று அடுத்த தலைமுறை 6 ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உருவாக்கத் தயாராகி வருகிறது என்று அறிவித்துள்ளது. இந்த அடுத்த தலைமுறை 6 ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்க எல்ஜி நிறுவனம் மற்ற இரண்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை 6 ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம்

அடுத்த தலைமுறை 6 ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் சோதனை மற்றும் அளவீட்டு நிறுவனமான கீசைட் டெக்னாலஜிஸ் மற்றும் தென் கொரியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகமான கொரியா மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் KAIST உடன் எல்ஜி நிறுவனம் ஒரு புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த தலைமுறை 6 ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு to 2029 ஆம் ஆண்டுக்குள் இதான் நடக்கும்

2024 ஆம் ஆண்டு to 2029 ஆம் ஆண்டுக்குள் இதான் நடக்கும்

ஒப்பந்தத்தின் கீழ், 6 ஜி தகவல்தொடர்புகளுக்கான முக்கிய அதிர்வெண் ஃபிரிக்வென்சி பேண்ட் டெராஹெர்ட்ஸ் தொடர்பான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் மூன்று தரப்பினரும் ஒத்துழைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 6 ஜி ஆராய்ச்சியை முடிக்க இந்நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளனர் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 6 ஜி நெட்வொர்க் 2029 ஆம் ஆண்டில் வணிகமயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை: அதிகமாக 'பார்ன்' பார்த்தால், கூகுள் எச்சரிக்கை: அதிகமாக 'பார்ன்' பார்த்தால், கூகுள் "இந்த"மெஸேஜை உங்களுக்கு அனுப்பும்.!

6 ஜி ஆராய்ச்சி மையம்

6 ஜி ஆராய்ச்சி மையம்

6 ஜி வேகமான தரவு வேகம், குறைந்த தாமதம் மற்றும் 5 ஜி ஐ விட அதிக நம்பகத்தன்மையை வழங்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. பயனர்களுக்கு மேம்பட்ட இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் ஆம்பியண்ட் இன்டர்நெட் ஆஃப் எவ்ரிதிங் (AIoE) என்ற கருத்தைக் கொண்டு வாரும் என்று கூறப்பட்டுள்ளது. எல்ஜி 2019 ஆம் ஆண்டில் KAIST உடன் 6 ஜி ஆராய்ச்சி மையத்தை நிறுவி, 6 ஜி தொழில்நுட்பங்களைப் படிப்பதற்காகக் கொரியா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தரநிலை மற்றும் அறிவியல் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நம் நாட்டின் நிலைமை இது தான்

நம் நாட்டின் நிலைமை இது தான்

இதில் கீசைட் டெக்னாலஜிஸ் 6 ஜி டெராஹெர்ட்ஸ் சோதனை உபகரணங்களின் முக்கிய சப்ளையர் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது எல்ஜி மற்றும் கைஸ்டின் 6 ஜி ஆராய்ச்சி மையத்திற்கு உபகரணங்களை வழங்கி வருகிறது. 2024 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கான 6ஜி பற்றி உலகம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் BSNL 4ஜி சேவையை முழுமைப்படுத்தப் போராடி வருகிறது. 5ஜி சேவை எப்போது பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்பதும் கேள்வி குறியாக இருக்கிறது என்பதே நம் நாட்டில் நடக்கும் நிலைமையாக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG Electronics has joined forces with two other partners to develop 6G network technology : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X