எல்ஜி நிறுவனத்தின் அடுத்த ஜி4 கருவி ரெடி..!
எல்ஜி ஜி4 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து எல்ஜி நிறுவனம் எல்ஜி ஜி 4 பீட் எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் வெளியாகும் இந்த கருவி அதன் பின் கனடா, இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் ஆப்ரிகா மற்றும் டர்கீ போன்ற நாடுகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 1.5 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 8 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டிருப்பதோடு கூடுதல் மெமரி குறித்த தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றது.
கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
இதோடு வை-பை 802.11 b, g, n, ப்ளூடூத் 4.1, என்எஃப்சி, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளமும் 2300 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications