அட்ராசக்கை.. பாதிக்கு பாதி இல்லை அதுக்கும் மேலே தள்ளுபடி.. 1.5 TON AC வாங்க சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க..
கோடை காலம் தொடங்கியதால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களின் கொளுத்தும் வெப்பத்திலிருந்து தப்பிக்க, பல வாடிக்கையாளர்கள் இப்போதே ஏசி (AC) என்றழைக்கப்படும் ஏர் கண்டிஷனர்களை (Air conditioner) வாங்கத் தொடங்கியுள்ளனர். நீங்கள் புதிதாக ஏசி வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு மக்கள் அதிகமாக புதிய ஏசி வாங்க திட்டமிடுவதனால், இந்திய சந்தையில் ஸ்ப்ளிட் ஏசி (split AC) மாடல்கள் மீது அபாரமான சலுகைகளும் விலை தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை சரியாக பயன்படுத்திக்கொண்டால், குறைந்த விலையில் ஏசி வாங்க முடியும்.
இந்திய சந்தையில் ஏசிக்கான தேவை அதிகரித்து வருவதால், 1.5 டன் ஸ்பிளிட் ஏசிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. தற்போது, எல்ஜி (LG), வோல்டாஸ் (Voltas), சாம்சங் (Samsung), ப்ளூ ஸ்டார் (Blue Star) மற்றும் டைகின் (Daikins) போன்ற பிரபலமான பிராண்டுகளின் ஏசி சாதனங்கள் மீது சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்தமான பிராண்டட் ஏசியை குறைந்த விலையில் வாங்க இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

அட்ராசக்கை.. பாதிக்கு பாதி இல்லை அதுக்கும் மேலே தள்ளுபடி.. 1.5 TON AC வாங்க சரியான நேரம்:
கோடைகால வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளதால், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் ஏசிகளை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது. உங்கள் செலவுகளைக் குறைக்க விரும்பினால், ஸ்பிளிட் ஏசியை வாங்க இது ஒரு சிறந்த நேரமாகும். குறிப்பாக, இப்போது பல ஏசி மாடல்கள் மீது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் கூடுதல் சலுகை மற்றும் விலை தள்ளுபடியை வழங்கி வருகின்றன.
அந்த வரிசையில், சிறந்த தேர்வாக நமக்கு கிடைத்துள்ள ஒரு அட்டகாசமான விலை தள்ளுபடி என்றால், அது எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC) மாடல் மீது அறிவிக்கப்பட்டுள்ள விலை தள்ளுபடி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஏசி மாடல் மீது இப்போது 52% நேரடி விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது US-Q18JNXE என்ற மாடல் எண்ணுடன் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC):
இந்த எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC) சாதனத்தின் அசல் விலை ரூ. 78,990 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோடை கால சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, இந்த ஏசி சாதனத்தின் மீது 52% நேரடி விலை தள்ளுபடி கிடைத்துள்ளது. இதனால், இந்த எல்ஜி ஸ்ப்ளிட் ஏசி சாதனத்தின் விலை ரூ. 37,690 வரை நேரடியாக குறைந்துள்ளது.
இத்தகைய மலிவு விலையில் இவ்வளவு சிறப்பான ஏசியை வாங்க எல்லா நேரங்களிலும் வாய்ப்பு கிடைக்காது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி (LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC) மாடலை இந்த சலுகையுடன் வாங்கும் போது உங்களுக்கு ரூ. 41,300 என்ற தொகை மிச்சமாகிறது. பாதிக்கு மேல் பாதி விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதனால், இது லாபகரமான ஷாப்பிங் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிடாதீர்கள் வாசகர்களே.


Click it and Unblock the Notifications