வரவிருக்கும் லெனோவா சூக் எட்ஜ் : என்னென்ன எதிர்பார்க்கலாம்.?!

சூக் தொடரின் கீழ் லெனோவாவிடம் இருந்து மற்றொரு ஸ்மார்ட்போனிற்காக தயாராகுங்கள்.

|

லெனோவா துணை பிராண்ட் ஆன சூக் ரகசியமாக சூக் எட்ஜ் (இசெட்2151) என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தொலைத்தொடர்பு உபகரணங்கள் சான்றிதழ் மையமான் டென்னாவிற்கு (TENNA) வருகை தந்தத்தின் மூலம் சில முக்கிய குறிப்புகள் வெளியாகியுள்ளன.

மோட்டோரோலா மற்றும் சூக் கைப்பற்றலுக்கு பிறகு லெனோவா ரூ.10,000 என்ற வகைப்பட்ட ஸ்மார்ட்போனிற்காக பணியாற்ற திட்டமிட்டுள்ளது என்று தெரிகிறது. ரூ.10,000 - 20,000 என்பது மிகவும் புத்திசாலித்தனமான வகையாகும். மோட்டோ கருவிகள் ரூ.15,000 வகை ஸ்மார்ட்போன்களாக பெயரிடப்பட, சூக் ரூ.15,000 - 20,000/- பிரிவின் கீழ் பெயரிடப்பட்டுள்ளது.

சரி வரவிருக்கும் லெனோவா சூக் எட்ஜ் கருவியில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கலாம்.?!

இரட்டை எட்ஜ் டிசைன் வடிவமைப்பு

இரட்டை எட்ஜ் டிசைன் வடிவமைப்பு

பெயரில் குறிப்பிடுவதை போலவே, சூக் எட்ஜ் ஒரு இரட்டை எட்ஜ் டிசைன் வடிவமைப்பு கொண்டுள்ளது என்று வதந்தி நிலவுகிறது, அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்7எட்ஜ் அல்லது சமீபத்தில் தொடங்கப்பட்ட சியோமி மி நோட் 2 போன்றே டிசைன். உடன் டென்னா பட்டியல் படி, இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் முழு எச்டி எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது

கண்ணாடி மெட்டல் பாடி

கண்ணாடி மெட்டல் பாடி

கர்வுடு டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடன் கூடுதலாக, ஸ்மார்ட்போன் முன் மற்றும் பின் பக்கத்தில் மெட்டல் ப்ரேம் மூலம் இணைக்கப்பட்ட கண்ணாடி மெட்டல் பாடி கொண்டிருக்கும் என்றும் லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்

சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்

டென்னா பட்டியலின்படி சூக் எட்ஜ் கருவியானது சூக் வரிசையில் வெளியான மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக தோன்றுகிறது. அது 2.35 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821எஸ்ஓசி, அட்ரெனோ 530 ஜிபியூ, 4ஜிபி ரேம் 32ஜிபி / 64ஜிபி உள்சேமிப்பு,கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உடன் அவுட் ஆப் பாக்ஸ் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் ஒரு 13எம்பி முதன்மை கேமிரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமிரா கொண்டுருக்கலாம் என்கிறது வதந்திகள். உடன் சாதனம் 4கே வீடியோக்கள் பதிவு திறன் கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலை

லெனோவா மோட்டோ இசட் ப்ளே ரூ.24.999/- என்றும், லெனோவா இசட்2 பிளஸ் விலை ரூ.19,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சூக் கருவியின் விலை இதற்கு இடையில் தான் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புது ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Lenovo ZUK Edge in the Making: 5 Things to Expect From the UPCOMING Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X