டிசம்பர் 18: மூன்று கேமராக்களுடன் லெனோவோ இசெட்5எஸ் அறிமுகம்.!
மேலும் 3120எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.
இந்திய சந்தையில் சமீபகாலமாக குறைந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது லெனோவோ நிறுவனம், ஆனால் இந்நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் வரும் டிசம்பர் 18-ம் தேதி
மிகவும் அதிகம் எதிர்பார்த்த லெனோவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக லெனோவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் மூன்று கேமரா லென்ஸ் வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்சங் மற்றும் நோக்கியா நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்
மாடல்களுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் லெனோவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடமபெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி பின்புறம் மூன்று கேமராக்கள் மற்றும் செல்பீ கேமரா உடன் செயற்கை நுண்ணறிவு அம்சமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3120எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும். பின்பு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு லெனோவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன்
மாடல் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications