2 டிஸ்பிளே லேப்டாப்.. பவர்புல் பெர்பார்மென்ஸ்.. எப்படினாலும் மடக்கலாம்.. புது Lenovo Yoga Book 9i விலை என்ன?
லெனோவா (Lenovo) நிறுவனம் இன்று (ஜூலை 25) இந்தியாவில் Lenovo Yoga Book 9i என்ற டூயல் ஸ்கிரீன் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் சமீபத்திய டூயல் டிஸ்பிளே லேப்டாப் என்பது இதுவாகும்.
இது 13வது ஜெனரல் இன்டெல் கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2.8K தரத்துடன் 13.3' இன்ச் OLED டச் டிஸ்ப்ளேகளைக் கொண்டுள்ளது. Lenovo Yoga Book 9i இன்டெல்லின் ஈவோ (Evo) இயங்குதளத்தில் இயங்குகிறது. இது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) தொழில்நுட்பத்துடன் கூடிய குவாட் ஸ்பீக்கர்களை உள்ளடக்கியது.

இது வைஃபை (Wi-Fi 6E) மற்றும் தண்டர்போல்ட் 4 (Thunderbolt 4) உள்ளிட்ட சமீபத்திய இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் போலியோ ஸ்டாண்ட் மற்றும் பிரிக்கக்கூடிய புளூடூத் கீபோர்டு போன்ற பல்வேறு பாகங்களுடன் வருகிறது. லெனோவா யோகா புக் 9i லேப்டாப் சாதனம் நான்கு செல் கொண்ட 80Whr பேட்டரி மூலம் இயங்குகிறது.
இந்தியாவில் Lenovo Yoga Book 9i விலை பற்றி பேசுகையில் இந்த சாதனம், ஆரம்ப விலையாக வெறும் ரூ. 2,24,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் டைடல் டீல் (Tidal Teel) ஷேடில் வருகிறது. தற்போது இந்த டிவைஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. Lenovo நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் இத்துடன் ரூ.10,000 கேஷ்பேக்கை வழங்குகிறது.
இத்துடன், நிறுவனம் இப்போது இந்த சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ் சலுகை போனஸாக ரூ.10,000 வரை தள்ளுபடி செய்கிறது. இந்த லெனோவா யோகா புக் 9i சாதனத்தின் மற்ற சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இது 2 OLED டிஸ்ப்ளேக்களுடன் சென்ட்ரல் ஹிஞ் உடன் இணைக்கப்பட்டதாகும்.
இந்த போல்டபில் டிஸ்பிளே ஆனது பயனர்கள் ஐந்து விரல் இயக்கத்துடன் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய அனுமதிக்கும். இந்த லேப்டாப் Windows 11 இல் இயங்குகிறது. இந்த லேப்டாப் 13.3' இன்ச் 2.8K OLED பியூர் சைட் (PureSight) டிஸ்பிளேவை 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் HDR சான்றிதழ் மற்றும் டால்பி விஷன் ஆதரவுடன் கொண்டுள்ளது.

Lenovo Yoga Book 9i ஆனது புதிய இன்டெல் ஈவோ (Intel Evo) இயங்குதளத்தில் 13வது ஜென் இன்டெல் i7 (13th Gen Intel Core i7) பிராசஸர் உடன் ஒருங்கிணைந்த இன்டெல் ஐரெஸ் ஏக்ஸ்இ கிராபிக்ஸ் (Intel Iris Xe Graphins) உடன் இயங்குகிறது. இது 16ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை PCIe SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இது டூயல் 2W ஸ்பீக்கர்ஸ் மற்றும் இரண்டு 1W போவர்ஸ் உடன் வருகிறது. வில்கின்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் ஆடியோ உள்ளது, இந்த லேப்டாப் சாதனம் முழு-எச்டி ஐஆர் ஆர்ஜிபி வெப்கேமைக் கொண்டுள்ளது. ஃபோலியோ ஸ்டாண்டைத் தவிர, லெனோவா, பிரிக்கக்கூடிய புளூடூத் கீபோர்டு மற்றும் யோகா புக் 9i உடன் கூடிய ஸ்டைலஸ் உள்ளிட்ட கூடுதல் பாகங்களை கொண்டுள்ளது.
இந்த லேப்டாப் மூன்று USB Type-C போர்ட்களை தண்டர்போல்ட் 4 (Thunderbolt 4) உடன் கொண்டுள்ளது மற்றும் Bluetooth 5.2 மற்றும் Wi-Fi 6E இணைப்பு வரை வழங்குகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. இந்த நேரம் டூயல் ஸ்கிரீன் பயன்பாட்டிற்கானது. இதே ஒரு டிஸ்ப்ளேயைப் பயன்படுத்தும் போது 14 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை தருகிறது.


Click it and Unblock the Notifications








