லெனோவோ நிறுவனத்தின் அடுத்த அதிரடி.!!
லெனோவோ நிறுவனம் வைப் எக்ஸ்3 எனும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதன் படி புதிய லெனோவோ வைப் எக்ஸ்3 கருவியின் விற்பனை நாளை மதியம் 2 மணிக்கு அமேசான் தளத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளாஷ் முறை இல்லாமல் இந்தியாவில் ரூ.19,999க்கு இந்த கருவி விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

லெனோவோ கே4 நோட் கருவியில் இருப்பதை போன்றே வைப் எக்ஸ் 3 கருவியிலும் விஆர் தியேட்டர் மேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஹெட்செட் தனியே ரூ.1299க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஹெட்செட் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 100-டிகிரி கோணத்தில் தியேட்டர் அனுபவத்தை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கல் கேன்டி நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஆடியோ அனுபவத்தை லெனோவோ வைப் எக்ஸ் 3 வழங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை லெனோவோ வைப் எக்ஸ்3 கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 64-பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 808 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 21 எம்பி ப்ரைமரி கேமராவும், 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 4கே வீடியோ பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டால்பி அட்மோஸ் டூயல் ஸ்பீக்கர் மூலம் கருவியில் எச்டி ஆடியோ அனுபவம் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைப் யூஸர் இன்டர்ஃபேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 மூலம் இயங்குகின்றது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications