லெனோவோவின் 4ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன் இம் மாதம் முதல் இந்தியாவில் கிடைக்கும்

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ பட்ஜெட் விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. A6000 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் நடைபெற்ற வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் இணையத்தில் மட்டும் ப்ரெத்யேகமாக இம்மாதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவோவின் புதிய 4ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன்

லெனோவோ A6000, 5 இன்ச் ஐபிஎஸ் எஹ்டி டிஸ்ப்ளே, 64-பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளதோடு 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கொண்டுள்ளது.

ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் லெனோவோவின் Vibe UI 2.0 இன்டர்பேஸ் மற்றும் 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. டூயல்சிம் கண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் ப்ளூடூத் 4.0 மற்றும் 3ஜியும் உள்ளதோடு 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

English summary
Lenovo unveils A6000 budget 4G phone, coming soon to India. Lenovo has unveiled a budget 4G smartphone, A6000, at CES 2015 in Las Vegas. The phone will be available this month in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot