ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களைச் சீண்டிய லெனோவோ.!!

By Meganathan
|

லெனோவோ நிறுவனம் தனது மோட்டோ பிரான்டு மூலம் புதிய விளம்பர பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. 'Skip the Sevens' என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த பிரச்சாரமானது ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை நேரடியாகக் கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 7, எஸ்7 மற்றும் ஆப்பிள் ஐபோன் 7 கருவிகளை நேரடியாகத் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

ஒரு முழு பக்க விளம்பரத்தின் மூலம் லெனோவோ நிறுவனம் மோட்டோ இசட் (Moto Z) மற்றும் மோட்டோ மாட் (Moto Mod) கருவிகளை முன் வைத்து ஆப்பிள் மற்றும் சாம்சங் பிரியர்களை புதிய தொழில்நுட்பத்தை பார்க்கக் கோரியுள்ளது.

வீடியோ

வீடியோ

இது குறித்து லெனோவோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தொனழில்நுட்ப சந்தையில் பெரு நிறுவங்களை நேரடியாகக் கிண்டல் செய்யும் வழக்கம் புதிதல்ல. லீஇகோ, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தைக் கிண்டல் செய்திருக்கின்றன.

குறிப்பு: வீடியோ இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

லீஇகோ

லீஇகோ

சமீபத்தில் லீஇகோ நிறுவனம் ஐபோன் 7 பிளஸ் பேட்டரி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேரடியாகக் கிண்டல் செய்தது. இதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஐபேட் ப்ரோ கருவியை வைத்து ஆப்பிள் நிறுவனத்தைக் கிண்டல் செய்தது. ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தைக் கிண்டல் செய்யும் வழக்கம் பல காலமாக இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

கிண்டல்

கிண்டல்

சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தைக் கிண்டல் செய்யும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இதே போல் சாம்சங் நிறுவனமும் சில முறை கிண்டல்களை சந்தித்துள்ளது.

தந்திரம்

தந்திரம்

இரு நிறுவனங்கள் போட்டி நிலவுவது சாதாரண விடயம் தான் என்ற போதும் இது போன்று கிண்டல் செய்யும் வழக்கம், குறிப்பிட்ட நிறுவனங்களைப் பொருத்த வரை ஒரு வித விளம்பர தந்திரமாகவே பார்க்கப்படுகின்றது.

வீடியோ

லெனோவோ'வின் புதிய விளம்பர வீடியோ

Best Mobiles in India

English summary
Lenovo teases Apple, Samsung with their ‘Skip the Sevens’ campaign Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X