யோசிக்காம வாங்குவீங்க.. 10200mAh பேட்டரி.. JBL ஸ்பீக்கர்கள்.. 1TB மெமரி.. மெட்டாலிக் பேனல்.. எந்த மாடல்?
மிட்-ரேஞ்ச் விலையில் லேப்டாப்புக்கு நிகரான 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 10200mAh பேட்டரி, ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் போன்ற பக்காவான அம்சங்கள் உடன் லெனோவா டேப் பி12 (Lenovo Tab P12) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
லேப்டாப்பில் செய்யும் வேலைகளை எளிதாகவும், சுலபமாகவும் இருந்த இடத்தில் செய்வதற்காகவே, பலர் டேப்லெட்டுகளை வாங்கி வருகிறார்கள். அதோடு, குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக டேப்லெட் கொடுக்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. இதனால், புதுப்புது டேப்லெட்கள் அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில், பிரீமியம் அம்சங்களுடன் மிட்-ரேஞ்ச் விலையில் லெனோவா டேப் பி12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லெனோவா டேப் பி12 அம்சங்கள் (Lenovo Tab P12 Specifications): இந்த லெனோவா டேப்லெட் 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் (LTPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
அதோடு டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் வருகிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த லெனோவா டேப்லெட்டில் பிளாஷ் லைட்டுடன் கூடிய 8 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராவில் ஆர்ஜிபி (RGB) சப்போர்ட் வருகிறது. இது பிரீமியம் மெட்டாலிக் பேனல் கொண்டுள்ளது. மொத்தமாக 615 கிராம் எடை மற்றும் 6.9 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7050 எஸ்ஓசி (MediaTek Dimensity 7050 SoC) சிப்செட் கொண்டிருக்கிறது. இதற்கு 2 ஆண்டுகள் ப்ரீ ஓஎஸ் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
இந்த லெனோவா டேப்லெட் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலில் விற்பனைக்கு வருகிறது. மேலும், 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10200mAh பேட்டரி வருகிறது.
இதை ஒரு முறை ஃபுல்சார்ஜ் செய்தால், தொடர்ந்து 10 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கொடுக்கும். இந்த டேப்லெட்டில் குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (Quad JBL Speakers) பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, சவுண்ட் குவாலிட்டி கிரிஸ்டர் கிளியர் அனுபவம் கொடுக்கும்.
இந்த டேப்லெட்டின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரையில், ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 6 (Wi-Fi 6 ) டைப் - சி ஆடியோ (Type-C Audio) உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வருகிறது.
இந்த லெனோவா டேப்லெட் ஸ்டோர்ம் கிரே (Storm Grey) மற்றும் ஓட் (Oat) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த டேப்லெட் இன்று (ஆகஸ்ட் 31) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை லெனோவா ஸ்டோர் (Lenovo Store) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.34,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு சில வங்கி கார்டுகளுக்கு அறிமுக சலுகைகளும் கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டில் லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த லெனோவா டேப்லெட் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








