இது இருந்தா.. கேமிங் லேப்டாப் வேணாம்.. QUAD ஸ்பீக்கர்கள்.. 3K டிஸ்பிளே.. 10200mAh பேட்டரி.. 1டிபி மெமரி!
மிட்-ரேஞ்ச் விலையில் மெட்டாலிக் பேனல், 3K டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 10200mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் லெனோவா டேப் பி12 (Lenovo Tab P12) விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முழு அம்சங்கள், விலை குறித்த விவரங்கள் இதோ.
லெனோவா டேப் பி12 அம்சங்கள் (Lenovo Tab P12 Specifications): இந்த லெனோவா டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7050 எஸ்ஓசி (MediaTek Dimensity 7050 SoC) சிப்செட் வருகிறது. இதற்கு 2 ஆண்டுகள் ப்ரீ ஓஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.

இந்த டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது. 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஆர்ஜிபி (RGB) சப்போர்ட் வருகிறது. இந்த லெனோவா டேப்லெட்டில் 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் (LTPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு 3K டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட உள்ளது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்டிருக்கிறது.
இது பிரீமியம் மெட்டாலிக் பேனல் கொண்டுள்ளதால் மிகுந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் 615 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதே போல 6.9 மிமீ தடிமன் வருகிறது. இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த லெனோவா டேப்லெட்டில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10200mAh பேட்டரி வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால், ஒரு முறை ஃபுல்சார்ஜ் செய்தால், தொடர்ந்து 10 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கிடைக்கும்.
இந்த டேப்லெட்டில் மற்றொரு பிரத்யேக அம்சமாக குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (Quad JBL Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. டேப்லெட்டின் 4 பக்கங்களிலும் தனித்தனி ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளதால், ஸ்டீரியோ அனுபவம் வியக்க வைக்கும்படி இருக்கும். அதோடு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருவதால் சவுண்ட் குவாலிட்டி கிரிஸ்டர் கிளியரில் இருக்கும்.
இந்த டேப்லெட்டில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டைப் - சி ஆடியோ (Type-C Audio), வை-பை 6 (Wi-Fi 6 ) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லெனோவா டேப்லெட் ஓட் (Oat) மற்றும் ஸ்டோர்ம் கிரே (Storm Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த டேப்லெட் ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று (செப்டம்பர் 5) விற்பனைக்கு வந்துள்ளது. இதை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் லெனோவா ஸ்டோர் (Lenovo Store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த லெனோவா டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் எச்டிஎப்சி கார்டுகளுக்கு சில சலுகைகளும் கிடைக்கின்றன. பிரீமியம் டிசைன், குவாலிட்டி டிஸ்பிளே, பக்காவான சிப்செட், நீண்ட பேட்டரி பேக்கப் கொண்ட டேப்லெட் வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த லெனோவா பி12 கச்சிதமான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








