இன்னுமா சின்ன டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? Lenovo Tab P11 Plus பாருங்க - பட்ஜெட்போன் விலையில் டேப்லெட் அறிமுகம்.!

|

லெனோவா நிறுவனம் Lenovo Tab P11 Plus என்ற புதிய டேப்லெட் சாதனத்தை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. Lenovo தனது புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட்டின் அறிமுகத்தை ஆன்லைன் வலைத்தளமான Amazon இந்தியா மூலம் களமிறக்கியுள்ளது. இந்த புதிய Lenovo Tab P11 Plus சாதனம் பற்றிய முக்கிய விபரக்குறிப்புகள், விலை மற்றும் விற்பனை தகவல் பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். குறிப்பாக, இந்த டேப்லெட் டிவைஸ், பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட்

புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட்

இந்த புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? என்ன விலையில் இதை நாம் இப்போது எங்கு வாங்கலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். Lenovo Tab P11 Plus டிவைஸ் 6ஜிபி ரேம் உடன் ஆக்டா-கோர் MediaTek Helio G90T சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் டிவைஸ், ஒரே ஒரு வண்ண விருப்பத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை Amazon வழியாக நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Lenovo Tab P11 Plus டேப்லெட்டில் இதெல்லாம் இருக்கா?

Lenovo Tab P11 Plus டேப்லெட்டில் இதெல்லாம் இருக்கா?

புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட்டில் ஃபிளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸின் முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் ஸ்டெடி ஃபோகஸ் செல்ஃபி கேமராவை நிறுவனம் வழங்கியுள்ளது. புதிய Lenovo Tab P11 Plus சாதனம், டால்பி அட்மாஸ் அம்சத்துடன், மேம்படுத்தப்பட்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இதில் ஸ்மார்ட் வாய்ஸ் DSP உடன் டூயல் மைக்ரோபோனை நிறுவனம் சேர்த்துள்ளது. இது 7,700mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!வேற்றுகிரகத்தில் கடல்-1 அல்ல 2: ஏலியன் உயிரை கண்டறிய NASAவின் புது 'நீந்தும்' ராக்கெட் திட்டம்!

இன்னுமா குட்டி டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? இதோ 11 இன்ச் டிஸ்பிளே

இன்னுமா குட்டி டிஸ்பிளே யூஸ் பண்ணுறீங்க? இதோ 11 இன்ச் டிஸ்பிளே

புதிய லெனோவா டேப் P11 பிளஸ் டேப்லெட் ஆனது 2K திறன் கொண்ட 2,000 x 1,200 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே 60Hz ரெப்ரெஷ்ஷிங் ரேட், 70 சதவிகித கலர் காமாட் NTSC அம்சம் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொண்ட 11' இன்ச் IPS LCD டிஸ்பிளேவை இது கொண்டுள்ளது. இது 400 nits வரை பிரைட்னஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸுடன் வருகிறது. இது 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை வழங்குகிறது.

டால்பி அட்மோஸுடன் குவாட் ஸ்பீக்கர்ஸ்

டால்பி அட்மோஸுடன் குவாட் ஸ்பீக்கர்ஸ்

புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட்டில் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமராவை நிறுவனம் வழங்கியுள்ளது. செல்பி மற்றும் வீடியோ காலிங் அம்சத்திற்காக இதில் ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லெனோவா டேப்லெட் ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பத்துடன் வருகிறது. முன்பே சொன்னது போல், இது டால்பி அட்மோஸுடன் மேம்படுத்தப்பட்ட குவாட் ஸ்பீக்கர் அமைப்பைப் பெறுகிறது. இது ஸ்மார்ட் வாய்ஸ் டிஎஸ்பியுடன் டூயல் மைக்ரோபோன் வரிசையையும் பெறுகிறது.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

பட்ஜெட் போன் விலையில் ஒரு புது டேப்லெட் வாங்கலாம்

பட்ஜெட் போன் விலையில் ஒரு புது டேப்லெட் வாங்கலாம்

இது 7,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 15 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. Lenovo Tab P11 Plus ஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பாவில் EUR 299 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த டிவைஸ் இப்போது ரூ. 25,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாடர்னிஸ்ட் டீல், பிளாட்டினம் கிரே மற்றும் ஸ்லேட் கிரேய் வண்ணங்களில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஸ்லேட் கிரேய் என்ற ஒரே ஒரு வண்ணத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo Tab P11 Plus With 11 Inch Display Launched At Rs 25999 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X