Just In
- 8 hrs ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 8 hrs ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- 9 hrs ago
உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
- 10 hrs ago
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
Don't Miss
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Movies
யோகிபாபுவின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் பொம்மை நாயகி.. வெளியானது சூப்பர் ட்ரெயிலர்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
லெனோவா நிறுவனம் Lenovo Tab P11 Plus இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Lenovo தனது அறிமுகத்தின் சரியான தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், e-commerce வலைத்தளமான Amazon இந்தியாவில், இந்த புதிய Lenovo Tab P11 Plus சாதனம் பற்றிய இந்திய வருகை மற்றும் இதன் முக்கிய விவரக்குறிப்புகள் பற்றிய தகவல்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும், இந்த புதிய Lenovo Tab P11 Plus சாதனத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? என்ன விலையில் இதை எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

புதிய Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்
இந்த புதிய Lenovo Tab P11 Plus ஆண்ட்ராய்டு டேப்லெட் MediaTek Helio G90T சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் டிவைஸ் ஆனது டால்பி அட்மாஸ் ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்களை பேக் செய்யுமென்று அமேசான் பக்க டீஸ் தகவல் குறிப்பிடுகிறது. புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட் 7,700mAh பேட்டரியைக் கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 15 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

அமேசான் இந்தியா வழியாக உறுதி செய்யப்பட்ட அறிமுகம்
கடந்த ஆண்டு, Lenovo நிறுவனம் ஐரோப்பிய சந்தைகளில் இந்த Lenovo Tab P11 Plus சாதனத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. லெனோவா டேப் பி11 பிளஸ் இந்தியாவில் வெளியிடப்படுவதை டீஸ் செய்வதற்காக அமேசான் தனது இணையதளத்தில் ஒரு பிரத்தியேக லேண்டிங் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும் இந்த லேண்டிங் பக்கத்தில் இந்த டேப்லெட் சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த சரியான வெளியீட்டுத் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Lenovo Tab P11 Plus டேப்லெட்டின் டிஸ்பிளே
குறிப்பாக இந்த Lenovo Tab P11 Plus டேப்லெட்டின் இந்திய விலை பற்றிய எதிர்பார்க்கப்படும் விலைப் புள்ளிகள் கூட குறிப்பிடப்படவில்லை. அமேசான் பட்டியலின் படி, வரவிருக்கும் டேப்லெட் டூயல் டோன் மெட்டல் பாடியுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட் 11' இன்ச் அளவு கொண்ட 2K IPS LCD டிஸ்பிளேவை ஆதரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 400 nits வரை பிரைட்னஸ் மற்றும் NTSC கலர் காமாட் 70 சதவீத கவரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட் ஸ்டோரேஜ்
இந்த புதிய Lenovo Tab P11 Plus டேப்லெட் சாதனத்தின் டிஸ்ப்ளே 16.7 மில்லியன் கலர் டெப்த் கொண்டது என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. Lenovo Tab P11 Plus டிவைஸ் 6ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் MediaTek Helio G90T சிப்செட் மூலம் இயங்குகிறது. முன்பே சொன்னது போல், இது டால்பி அட்மோஸிற்கான ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட் வாய்ஸ் டிஎஸ்பியுடன் டூயல்-மைக்ரோஃபோன் வரிசையைக் கொண்டுள்ளது. Lenovo Tab P11 Plus ஆனது 7,700mAh பேட்டரியை வழங்கும்.

Lenovo Tab P11 Plus டிவைஸை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்
Lenovo Tab P11 Plus ஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பாவில் EUR 299 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின்படி, இந்த புதிய Lenovo Tab P11 Plus சாதனம் தோராயமாக ரூ. 26,500 என்ற விலைப் புள்ளியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த டிவைஸ் விரைவில் ஆரம்ப சலுகையுடன் இன்னும் குறைவான விலையில் கூட அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது. இது மாடர்னிஸ்ட் டீல், பிளாட்டினம் கிரே மற்றும் ஸ்லேட் கிரேய் வண்ணங்களில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470