Home
News

மார்க்கெட் மிரளுது.. போனை விட குறைந்த விலையில் Lenovo Tab M11 டேப்லெட்-ஆ? என்ன விலை? என்ன அம்சம்?

லெனோவா (Lenovo) நிறுவனம் இப்போது புது லெனோவா டேப் M11 (Lenovo Tab M11) என்ற டேப்லெட் (Tablet) சாதனத்தை பட்ஜெட் விலையில் (Budget price tablet) அறிமுகம் செய்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த டேப்லெட் பற்றிய கூடுதல் விபரம் இதோ.

லெனோவா நிறுவனம், இப்போது ஸ்மார்ட்போன் வாங்கும் பட்ஜெட் விலையில் புதிதாக ஒரு டேப்லெட் சாதனத்தை CES 2024 நிகழ்வில் அறிமுகம் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதை நிறுவனம் லெனோவா டேப் M11 (Lenovo Tab M11) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது லெனோவா டேப் M10 (Lenovo Tab M10) மாடலின் வாரிசாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட் மிரளுது.. போனை விட குறைந்த விலையில் Lenovo Tab M11 டேப்லெட்

இந்த Lenovo Tab M11 சாதனம் மிகவும் சக்தி வாய்ந்த மீடியாடெக் ஹீலியோ G88 சிப்செட் (MediaTek Helio G88 chipset) உடன் 7,040mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது பின்பக்கத்தில் 13MP ரியர் கேமராவுடன், முன்பக்கத்தில் 8MP செல்பி ஸ்னாப்பர் கேமராவை கொண்டுள்ளது. இத்தனை பெஸ்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாதனம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

லெனோவா டேப் M11 (Lenovo Tab M11):

இந்த Lenovo Tab M11 டேப்லெட் சாதனம் அமெரிக்க சந்தையில் முதலில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, உலக சந்தை மற்றும் இந்திய டேப்லெட் சந்தைகளில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த Lenovo Tab M11 சாதனம் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் உடன் ரூ.14,900 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்திய சந்தை மற்றும் உலக சந்தையில் 4GB + 128GB மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டின் சிறந்த பட்ஜெட் விலை டேப்லெட் சாதனமாக இது மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சரி, இந்த விலையில் இந்த டேப்லெட் சாதனத்தில் என்ன அம்சங்கள் உள்ளதென்று பார்க்கலாமா?

மார்க்கெட் மிரளுது.. போனை விட குறைந்த விலையில் Lenovo Tab M11 டேப்லெட்

லெனோவா டேப் M11 சிறப்பம்சம் (Lenovo Tab M11 Specifications):
இந்த லெனோவா டேப் M11 (Lenovo Tab M11) சாதனம் ஆனது 11" இன்ச் கொண்ட 1920 x 1200 பிக்சல் IPS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இந்த டேப்லெட் சாதனம் ரீடிங் மோட் அம்சத்துடன் மல்டி டாஸ்கிங் அம்சத்தை ஆதரிக்கிறது. ரீடிங் மோடிற்கு ஏற்ப இந்த டிஸ்பிளே மோனோ மற்றும் கிரோமாட்டிக் அம்சத்திற்கு மாறிக்கொள்கிறது.

இது மீடியாடெக் ஹீலியோ G88 சிப்செட் (MediaTek Helio G88 SoC) உடன் வருகிறது. இது மாலி-G52 எம்பியூ ஜிபியு (Mali-G52 MP2 GPU) உடன் 6GB of LPDDR4x ரேம் மற்றும் 128GB eMMC 5.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி (microSD card) வழியாக 1TB வரையிலான கூடுதல் ஸ்டோரேஜ் நன்மையை வழங்குகிறது.

இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளிவரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 15 (Android 15) வரை தடையில்லாத அப்டேட்டை பெரும் என்றும், அதேபோல், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்கிரேடுகளை பெரும் என்றும் நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. இது ஸ்டைலஸ் பென் உடன் 15W வயர்டு சார்ஜிங் ஆதரிக்கும் 7040mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab M11 Tablet Launched In CES 2024 Under Budget Segment With 11 Inch IPS LCD Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X