ரூ.10,000 விலை.. 11 இன்ச் Tablet.. Lenovo Tab M11 மீது மாஸ் தள்ளுபடி.. உடனே 2 வாங்கி போடுங்க.. போனா வராது..
லெனோவா (Lenovo) நிறுவனம் பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்துடன் இணைந்து, அதன் லெனோவா டேப் M11 (Lenovo Tab M11) மாடல் மீது 61% விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் விளைவாக இந்த 11 இன்ச் டேப்லெட் (11 inch tablet) சாதனத்தின் விலை அப்படியே பாதிக்கு பாதி குறைந்துள்ளது. இல்லை.. இல்லை.. பாதிக்கு மேல் பாதி குறைந்துள்ளது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ரூ. 10,000 விலையில் ஸ்மார்ட்போன் (smartphone) தான் வாங்க திட்டமிட்டவர்கள் கூட இப்போது இந்த டேப்லெட்டை (Tablet) வாங்கலாம்.
என்னது, வெறும் ரூ. 10,000-த்துடன் மொபைல் வாங்க திட்டமிட்டவர்கள் கூட இப்போது இந்த Lenovo Tab M11 டேப்லெட் சாதனத்தை வாங்கலாமா? ஆமாங்க உண்மை தான். இந்த Lenovo Tab M11 டேப்லெட் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்து 10 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இத்தகைய சலுகையை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் நம்பகமான டேப்லெட் டிவைஸ் பிராண்ட் என்று போற்றப்படும் லெனோவாவிடமிருந்து இப்படி ஒரு சலுகை ஆச்சரியத்திற்குரியது.

ரூ.10,000 விலை.. 11 இன்ச் Tablet.. Lenovo Tab M11 மீது மாஸ் தள்ளுபடி:
Lenovo Tab M11 சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, அதன் MRP விலை ரூ. 31,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மிட் பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வந்த டேப்லெட் இப்போது ரூ. 10,000 விலை பிரிவில் வாங்க கிடைக்கிறது. தற்போது பிளிப்கார்ட் வழங்கியுள்ள 61% டிஸ்கவுண்ட்டிற்கு பிறகு, இதன் விலை ரூ. 11,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
கூடுதல் வங்கி சலுகையுடன், இந்த டேப்லெட் மீது ரூ. 1250 முதல் ரூ. 1500 வரை எக்ஸ்ட்ரா சலுகையையும் பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் Lenovo Tab M11 சாதனத்தை அதிகபட்சமாக ரூ.10,499 என்ற விலைக்கு வாங்க முடியும் மக்களே. இது WiFi ஒன்லி மாடலின் விலை. இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இந்த லெனோவா டேப் எம்11 சாதனம் 11" இன்ச் கொண்ட WUXGA IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
லெனோவா டேப் M11 டேப்லெட் (Lenovo Tab M11 Tablet):
இது ஒரு தரமான மற்றும் நம்பகமான FHD டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளே 1920x1200 பிக்சல், 400 நீட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) உடன் 72% NTSC போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் சாதனம் 8GB ரேம் (RAM) அம்சத்தை கொண்டுள்ளது. இது 128GB ஸ்டோரேஜ் (Storage) உடன் 1TB வரையிலான மைக்ரோ எஸ்டி (microSD) மெமரியை வழங்குகிறது.
இது மீடியாடெக் ஹீலியோ ஜி88 ஆக்டா கோர் சிப்செட் (Mediatek Helio G88 Octa-Core Processor) உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்துடன் இயங்குகிறது. இது குவாட் ஸ்பீக்கர் (Quad Speakers) உடன் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 13MP சிங்கிள் ரியர் கேமரா உடன் வருகிறது.
யாரு தான் ரூ. 10,000 விலைக்கு இந்த Tablet-டை வேண்டாமென்று சொல்வார்கள்?
இந்த ரியர் கேமரா மற்றும் செல்பி கேமரா 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு போன்றவற்றை ஆதரிக்கிறது. இந்த லெனோவா டேப்லெட் (Lenovo Tablet) 7040mAh கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இது 10 மணி நேரத்திற்கு மேம்பட்ட பயன்பாட்டு நேரத்தை வழங்குகிறது. இறுதியாக இது 465 கிராம் எடையுடன், 7.1mm ஸ்லிம் சைஸில் வெளிவந்துள்ளது. வெறும் ரூ.10,000 விலையில் இத்தகைய லேட்டஸ்ட் டேப்லெட் சாதனத்தை யார் தான் மிஸ் செய்வார்கள், நீங்களே சொல்லுங்க.


Click it and Unblock the Notifications








