ஸ்டைலஸ் ஆதரவு, கிளாசிக் லுக்- சரியான விலையில் லெனோவா டேப் கே10: 7500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்!

|

லெனோவா டேப் கே10 சாதனமானது ரூ.25,000 என்ற விலை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த டேப்லெட்டை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. வைஃபை மற்றும் வைஃபை ப்ளஸ் 4ஜி எல்டிஇ ஆதரவோடு இது வருகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிகாரப்பூர்வ நிறுவன இணையதளத்தில் தள்ளுபடி விற்பனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும்

ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும்

இந்த புதிய டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது. இது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 டி சிப்செட் பயன்படுத்துகிறது. லெனோவா ஆக்டிவ் பென் ஸ்டைலஸின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. நிறுவன சார்ந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் வைத்து பேட்டரி இல்லா மாறுபாட்டை சந்தைப்படுத்துகிறது என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.

லெனோவா டேப் கே10 விலை

லெனோவா டேப் கே10 விலை

இந்தியாவில் லெனோவா டேப் கே10 விலை குறித்து பார்க்கையில் இது ரூ.25,000 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆனது இரண்டு வகைகளில் வருகிறது. வைஃபை மற்றும் வைஃபை ப்ளஸ் 4ஜி எல்டிஇ ஆதரவோடு இது வருகிறது. அதேபோல் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் கீழ் வைஃபை ப்ளஸ் 4ஜி எல்டிஇ மாறுபாட்டுடன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,999 ஆக இருக்கிறது.

லெனோவா டேப் கே10 சாதனத்தின் மற்றொரு வேரியண்ட்

லெனோவா டேப் கே10 சாதனத்தின் மற்றொரு வேரியண்ட்

அதேபோல் லெனோவா டேப் கே10 சாதனத்தின் மற்றொரு வேரியண்ட் ஆன 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியின் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.15,999 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் வைஃபை ப்ளஸ் 4ஜி எல்டிஇ வேரியண்ட் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. இந்த டேப்லெட் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியானது தற்போது ஸ்டாக் இல்லை என கூறப்படுகிறது. லெனோவா டேப் கே10 ஒற்றை அபிஸ் ப்ளூ வண்ண வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையுடன் வருகிறது. இதன் மூலம் பயனர்கள் ஆறு மாதம் வரை ரூ.2333 என்ற இஎம்ஐ விருப்பத்தில் இந்த டேப்லெட்டை வாங்கலாம்.

லெனோவா டேப் கே10 விவரக்குறிப்புகள்

லெனோவா டேப் கே10 விவரக்குறிப்புகள்

லெனோவா டேப் கே10 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், லெனோவா டேப் கே10 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 12 சாதனத்துக்கான மேம்பாட்டு வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது 1920 x 1200 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் Lenovo Active Pen ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த டேப்லெட் ஆனது 10.3 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிடிடிஐ டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. டேப்லெட் வன்பொருள் அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 டி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்தி 2டிபி வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

7500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி

7500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி

லெனோவா டேப் கே10 இமேஜிங் அம்சங்களில் 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் பின்புறத்தில் ஒருங்கிணைந்த ஃப்ளாஷ் யூனிட் ஆதரவோடு வருகிறது. முன்பக்கத்தில் 5 எம்பி பிரதான செல்பி கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. லெனோவாவின் நிலையான டேப்லெட்டின் இணைப்பு அம்சங்கள் குறித்து பார்க்கையில் டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் ஹெட்ஃபோன் ஜாக் உடன் வருகிறது. லெனோவா டேப் கே10 ஆனது டால்பி அட்மாஸ் உடன் டூயல் ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இது ஐஓஎக்ஸ்டி சான்றிதழை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஃபேஸ் அன்லாக் அம்சமும் இருக்கிறது. இந்த டேப்லெட் ஆனது 7500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo Tab K10 Launched in India With Two Variants, Wifi+ 4G LTE and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X