ஸ்மார்ட்போன் நிறுவனம் அதிரடி : 0.9 நொடிகளில் 10,000 மொபைல்கள் விற்று தீர்ந்தது.!!

By Meganathan
|

சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் லெனோவோ கே3 நோட் கருவியை தொடர்ந்து கே4 நோட் எனும் புதிய கருவியை ரூ.12,499 என்ற விலைக்கு இந்தியாவில் வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. முன்பதிவுகளை தொடர்ந்து கே4 நோட் கருவியின் ப்ளாஷ் விற்பனை நேற்று ( ஜனவரி 19 ) மதியம் நடைபெற்றுது.

அந்த வகையில் லெனோவோ நிறுவனத்தின் புதிய கே4 நோட் கருவியானது ப்ளாஷ் விற்பனையில் புதிய சாதனை புரிந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். அப்படியாக லெனோவோ கே4 நோட் கருவிகள் அனைத்தும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கருவிகள்

கருவிகள்

ப்ளாஷ் விற்பனையின் உச்சமாக சுமார் 10,000 கே4 நோட் கருவிகள் அதிகபட்சமாக 0.9 நொடிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக லெனோவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

லெனோவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்த கருவியின் விற்பனை இன்றும் ( ஜனவரி 20 ) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இன்று வாங்குவோருக்கு ஹெட்செட் வழங்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு

முன்பதிவு

தற்சமயம் வரை இந்த கருவியை வாங்க சுமார் 4,80,566 பேர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லெனோவோ கே4 நோட் கருவியானது அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த கருவிக்கான அடுத்த ப்ளாஷ் விற்பனை ஜனவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை

திரை

லெனோவோ கே4 நோட் கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

புதிய லெனோவோ கே4 நோட் ஆக்டாகோர் மீடியாடெக் MT6753 SoC பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

கேமரா

கேமரா

சிறப்பான புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி ப்ரைமரி கேமரா PDAF ஆட்டோஃபோகஸ் , டூயல் டோன் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

லெனோவோ கே4 நோட் கருவியில் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

158 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த கருவியானது 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு இந்த கருவியானது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் மற்றும் லெனோவோ வைப் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது.

செக்யூரிட்டி

செக்யூரிட்டி

பாதுகாப்பு காரணங்களுக்காக லெனோவோ கே4 நோட் கருவியில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இதோடு டிஜிட்டல் காம்பஸ், அக்செல்லோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

சவுன்டு

சவுன்டு

மேலும் இந்த கருவியில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்பீக்கர்கள் முன்பக்கமாக பொருத்தப்பட்டுள்ளதால் திரைப்படம் மற்றும் கேமிங் பயன்பாடுகளின் போது சிறப்பான அனுபவம் பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Lenovo sells 10,000 K4 Note units in less than a second. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X