டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இனி சாத்தியமே..!?

By Meganathan
|

ஸ்மார்ட்போன் உலகில் தினமும் பல புதிய தொழில்நுட்பங்கள் மக்களை வியப்படைய வைப்பதோடு சந்தையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியையும் அதிகமாக்குகின்றது எனலாம். ஒரு நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றால் போட்டி நிறுவனம் அதை எதிர்கொள்ள தக்க தொழில்நுட்பத்தை வெளியிட்டு மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றது. இந்த போட்டி ஆரோக்கிமானது தான் என்றாலும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த, அதே சமயம் விலை குறைவாகவும் இருக்கும் தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது எனலாம்.

சிக்கி கொண்ட சீனா..!

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்று உயரிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படியாக திடீரென சந்தையை திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்பம் மற்றும் அதை வெளியிட இருக்கும் நிறுவனம் குறித்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஃபேஸ்புக் : பாதுகாப்பு முக்கியம் மக்களே..!!

ஸூக்

ஸூக்

லெனோவோவின் ஆன்லைன் பிரான்ட் ஸூக் தனது முதல் ஸ்மார்ட்போனான ஸூக் இசட்1 கருவியை சீனாவில் வெளியிட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

தற்சமயம் இதே நிறுவனம் புதிய வகை டிஸ்ப்ளே கொண்ட கருவியின் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கின்றது.

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே

அதன் படி அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கின்றது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

ஒளி ஊடுருவுகிற திரை கொண்ட புதிய ஸ்மார்ட்போன் மற்ற ஸ்மார்ட்போன்களை போன்றே புகைப்படம், பாடல், வீடியோ மற்றம் பல சேவைகளையும் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

இன்டர்ஃபேஸ்

இன்டர்ஃபேஸ்

மேலும் இந்த ஆண்ட்ராய்டு இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என வெளியான புகைப்படங்களில் இருந்து அறிய முடிகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே குறித்த எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், தற்சமயம் வரை இந்த கருவி அடுத்தாண்டு இறுதியில் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே கூறப்படுகின்றது.

போட்டி

போட்டி

விளைந்த டிஸ்ப்ளே, பெஸல் இல்லாத டிஸ்ப்ளே, டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே வகைகளை ஏற்கனவே சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் புகைப்படங்களாக வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லெனோவோ

லெனோவோ

லெனோவோ பிரான்ட் ஸூக், டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே புகைப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களுடன் நேரடி போட்டிக்கு தயார் நிலையில் இருப்பதையே உணர்த்துகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Zuk, Lenovo's online-only brand, has showcased a smartphone prototype, the highlight of which is a transparent display.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X