லெனோவோ ஏ6000 ப்ளஸ் இந்தியாவில் ரூ.7499க்கு வெளியானது
லெனோவோ ஏ6000 இந்தியாவில் ரூ.6999க்கு வெளியானதை தொடர்ந்து சில மாற்றங்களை செய்து லெனோவோ நிறுவனம் ஏ6000 ப்ளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. புதிய லெனோவோ ஏ6000 ப்ளஸ் ரூ.7499க்கு வெளியிடப்பட்டுள்ளதோடு ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே ப்ரெத்யேகமாக கிடைக்கின்றது. இதன் முன்பதிவு இன்று துவங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய லெனோவோ ஏ6000 ப்ளஸ் 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது. இதோடு 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 720*1280 பிக்ஸல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளதோடு 64 பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் கொண்டுள்ளது.
டூயல் சிம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

டால்பி டிஜிட்டல் ப்ளஸ் கொண்ட டூயல் ஸ்பீக்கர் மற்றும் 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2ஜி, 3ஜி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications