கே5 நோட் வெளியானது, இதுல என்ன தான் இருக்கு.??
வைப் கே4 நோட் கருவியை வெளியிட்டு சில தினங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் லெனோவோ நிறுவனம் கே5 நோட் எனும் புதிய கருவியை சீனாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.11,350 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லெனோவோ கருவிகளுக்கு இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் வரும் வாரங்களில் இந்த கருவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

தற்சமயம் வரை சீனாவில் மட்டும் ப்ளாஷ் விற்பனை செய்யப்பட இருக்கும் லெனோவோ கே5 நோட் கருவியானது முற்றிலும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவியில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதோடு இந்த கருவியானது டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களையும் கொன்டிருக்கின்றது.

லெனோவோ கே4 நோட் போன்றே கே5 நோட் கருவியும் மீடியாடெக் பிராசஸர் மூலம் சக்தியூட்டப்படுகின்றது. அதன் படி கே5 நோட் கருவியில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹெலியோ P10 பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது, இத்துடன் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கே5 நோட் கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, PDAF ஆட்டோஃபோகஸ், டூயல்- டோன் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு கே5 நோட் கருவியில் 4ஜி எல்டிஈ, GPRS/ EDGE, 3ஜி, A-GPS, ப்ளூடூத் 4.0, மைக்ரோ-யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளமும் வைப் யூஸர் இன்டர்ஃபேஸ், டிஜிட்டல் காம்பஸ், அக்செல்லோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications