Home
News

இந்தியாவில் லெனோவோ கே4 நோட் வெளியானது..!!

By Meganathan

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ கே3 நோட் கருவியின் அடுத்த மாடலான கே4 நோட் பேப்ளெட் கருவியை ரூ.11,999க்கு இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அமேசான் இணையத்தில் மட்டும் ப்ளாஷ் முறையில் இந்த கருவி விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

இந்த விற்பனையில் கலந்து கொள்ள இருப்பவர்கள் இன்று ( 05/01/2016 ) மதியம் சுமார் 3.00 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம். இதை தொடர்ந்து முதல் விற்பனை ஜனவரி மாதம் 19 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை ஸ்லைடர்களில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

திரை

திரை

லெனோவோ கே4 நோட் கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

புதிய லெனோவோ கே4 நோட் ஆக்டாகோர் மீடியாடெக் MT6753 SoC பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

கேமரா

கேமரா

சிறப்பான புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி ப்ரைமரி கேமரா PDAF ஆட்டோஃபோகஸ் , டூயல் டோன் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

லெனோவோ கே4 நோட் கருவியில் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

158 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த கருவியானது 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு இந்த கருவியானது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் மற்றும் லெனோவோ வைப் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது.

செக்யூரிட்டி

செக்யூரிட்டி

பாதுகாப்பு காரணங்களுக்காக லெனோவோ கே4 நோட் கருவியில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இதோடு டிஜிட்டல் காம்பஸ், அக்செல்லோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

சவுன்டு

சவுன்டு

மேலும் இந்த கருவியில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்பீக்கர்கள் முன்பக்கமாக பொருத்தப்பட்டுள்ளதால் திரைப்படம் மற்றும் கேமிங் பயன்பாடுகளின் போது சிறப்பான அனுபவம் பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Lenovo K4 Note with fingerprint scanner launched in India at Rs.11,999. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X