லெனோவோ நிறுவனத்தின் புதிய டேப்ளெட் இந்தியாவில் ரூ,4,999க்கு வெளியிடப்பட்டுள்ளது

Written By:

லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் டேப் 2 A7-10 என்ற புதிய டேப்ளெட் மாடலை ரூ.4,999க்கு வெளியிட்டுள்ளது. இந்த டேப்ளெட் விற்பனை ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் ப்ரெத்யேகமாக நடைபெற இருக்கின்றது. இந்த டேப்ளெட் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

லெனோவோவின் புதிய டேப்ளெட் இந்தியாவில் ரூ,4,999க்கு வெளியிடப்பட்டுள்ளது

இந்த டேப்ளெட் 9.3 எம்எம் மெலிதாகவும் 269 கிராம் எடையில் கிடைக்கின்றது. இதில் 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. மேலும் ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்ளெட் 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. இதோடு ப்ளூடூத் 4.0, வைபை, 0.3 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளதோடு 3450 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

English summary
Lenovo has launched a tablet for Rs.4,999. Lenovo has launched a new tablet in the Indian market called Tab 2 A7-10 for a low-price of Rs 4,999 only. The tablet will go on sale on Snapdeal.com exclusively.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot