TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
கடந்த ஆண்டை பொருத்த வரை 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை கல்லா கட்டியதோடு அனைவராலும் விரும்பப்பட்ட நிறுவனமாக லெனோவோ உருவாகியிருப்பதாக பிரபல இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. 4ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனையை வைத்து பட்ஜெட் கருவிகளில் இருந்து டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எவ்வாறு 4ஜி கருவிகளை வாங்குகின்றனர் என்பதை பார்க்க முடிவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி #FlipTrends எனும் ஆண்டு அறிக்கை முடிவுகளின் படி லெனோவோ ஏ6000 ப்ளஸ் மற்றும் லெனோவோ கே3 நோட் கருவிகள் 2015 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் என்றும் இவைகளை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஜென் 3 மற்றும் மோட்டோ ஈ ஜென் 2 போன்ற கருவிகள் மூன்று மற்றும் ஆறாவது இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு சியோமி எம்ஐ 4ஐ மற்றும் ரெட்மி நோட் 4ஜி முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடம் பிடித்திருக்கின்றன. இதை தொடர்ந்து கேலக்ஸி ஆன்7, கேலக்ஸி ஜெ7 மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்ப்ரஸ் 2 மற்றும் ஏசஸ் சென்ஃபோன் 5 அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.
லெனோவோ நிறுவனம் மோட்டோரோலா நிறுவனத்தை நிர்வகிப்பதோடு இந்தியாவில் தலைசிறந்த 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இதை தொடர்ந்து அந்நிறுவனம் உள்நாட்டில் தனது கருவிகளின் தயாரிப்பை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் தி எகனாமிக் டைம்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி லெனோவோ நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் இடம் பிடிக்க திட்டமிட்டு வருவதோடு ஆண்டிற்கு சுமார் 10 மில்லியன் கருவிகளை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து இந்தியா முழுவதும் தயாரிப்பு ஆலைகளை துவங்கவும் லெனோவோ நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.