இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனம்..!!
ஸ்மார்ட்போன் சந்தையில் தினமும் பல்லாயிர கணக்கான கருவிகள் வெளியாகி வருகின்றன. ஆசிய ஸ்மார்ட்போன் சந்தை உலகின் மிகப்பெரிய சந்தையாக கருதப்படும் நிலையில் இந்திய சந்தையில் சீன கருவிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சீனாவை 'வீழ்த்தப் போகிறது' இந்தியா..!
உலகம் முழுவதிலும் தலைசிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனம் குறித்த விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

லெனோவோ
இந்தியாவில் லெனோவோ நிறுவனம் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவாகி வருவதாக கூறப்படுகின்றது.

காலாண்டு
இரண்டாம் காலாண்டு நிலவரப்படி லெனோவோ நிறுவனம் 4ஜி சந்தையில் 29.4 சதவீத பங்குகளுடன் வேகமாக முன்னேறி வருவதாக ஆசிய பசிபிக் ஐடிசி தெரிவித்திருக்கின்றது.

காரணம்
லெனோவோ நிறுவனம் பத்து லட்சத்திற்கும் அதிகமான 4ஜி எல்டிஈ கருவிகளை இரண்டாம் காலாண்டு வாக்கில் விற்பனை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் மொத்தம் 35 லட்சம் 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஐடிசி
ஐடிசி காலாண்டு மொபைல் போன் ட்ராக்கர் அறிக்கையின் படி லெனோவோ நிறுவனம் இந்தியாவின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி
லெனோவோ நிறுவனம் ஏ6000, ஏ7000, ஏ6000 ப்ளஸ் மற்றும் கே3 நோட் போன்ற ஸ்மார்ட்போன்களின் அதிரடி விற்பனை மூலம் இதை சாத்தியமாக்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

விற்பனை
அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி லெனோவோ நிறுவனம் 3.3 சதவீத உயர்வை சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இறக்குமதி
இந்தியாவில் லெனோவோ ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி சுமார் 44 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருவிகள்
இரண்டாம் காலாண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 26.5 மில்லியன் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டதாக ஐடிசி தெரிவித்துள்ளது.

முகநூல்
இது போன்ற மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications