லேப்டாப் வாங்கலயோ Laptop.. பொசுக்குன்னு 48% தள்ளுபடியை அறிவித்த Lenovo.. அதுவும் பல மாடல்கள் மீது!
தீபாவளி வரட்டும்.. ஆஃபர் விலையில் ஒரு நல்ல லேப்டாப்பா பார்த்து வாங்கிட வேண்டியது தான் என்று காத்திருக்கும் பல பேரில் நீங்களும் ஒருவரா? ஆமென்றால்.. இதுவே அதற்கான சரியான நேரம். ஏனென்றால் லெனோவாவின் தீபாவளி தமாக்கா விற்பனை தற்போது நேரலையில் உள்ளது.
லெனோவாவின் இந்த 2023 தீபாவளி விற்பனையின் (Lenovo Diwali Sale 2023) கீழ் லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் பிற அக்ஸசெரீஸ்கள் மீது 60% வரையிலான தள்ளுபடி, எந்தவொரு வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினாலும் 10% வரை கேஷ்பேக் மற்றும் ரூ.7,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீபாவளி சிறப்பு விற்பனையின் போது, லெனோவா தயாரிப்புகளின் மீது 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது. இப்படியாக என்னென்ன லெனோவா லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் அக்ஸசெரீஸ்கள் மீத என்னென்ன சலுகைகள் / தள்ளுபடிகள் கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:
லெனோவாவின் இந்த தீபாவளி தமாக்கா விற்பனையில் என்னென்ன லேப்டாப்களின் மீது தள்ளுபடி கிடைக்கிறது? லெனோவா நிறுவனத்தின் திங்க்பேட் (ThinkPad), ஐடியாபேட் (IdeaPad), லெஜியன் (Legion) மற்றும் யோகா சீரீஸ்களை (Yoga Series) உள்ளடக்கிய லேப்டாப் மாடல்களுக்கு 48% வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.

குறிப்பாக, 13த் ஜென் இன்டெல் ஐ5 ப்ராசஸர், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ் கொண்ட திங்க்பேட் இ16 லேப்டாப் (ThinkPad E16 Laptop) மாடலானது அசல் விலையை விட 41% குறைந்து ரூ.71,990 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல ஏஎம்டி ரைஸன் 5 ப்ராசஸர், 16ஜிபி ரேம், 512ஜிபி எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ் மற்றும் ஒருங்கிணைந்த ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் கார்டு கொண்ட இ16 லேப்டாப் மாடலானது 36 சதவீத தள்ளுபடியை பெற்று ரூ.61990 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

11த் ஜென் இன்டெல் ஐ7 ப்ராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ் மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்450 கிராபிக்ஸ் கார்டு ஆகியவற்றைக் கொண்ட ஐடியாபேட் ஸ்லிம் லேப்டாப் மாடலானது 42 சதவீதம் தள்ளுபடியை பெற்று ரூ.62,990 க்கு வாங்க கிடைக்கிறது.
11த் ஜென் இன்டெல் ஐ7 ப்ராசஸர், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் லேப்டாப் மாடலானது 36 சதவீதம் தள்ளுபடியை பெற்று ரூ.50,790 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.
லெனோவா நிறுவனத்தின் பிரீமியம் லேப்டாப் சீரீஸ் (Premium laptop series) ஆன லிஜியன் சீரீஸ் லேப்டாப் மாடல்கள் ஆனது 46 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. லிஜியன் 5 ப்ரோ (Legion 5 Pro) மாடலானது ரூ.112,490 க்கு வாங்க கிடைக்கிறது.
லெனோவாவின் இந்த தீபாவளி தமாக்கா விற்பனையில் என்னென்ன டேப்லெட்டுகளின் மீது தள்ளுபடி கிடைக்கிறது? மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி உடன் வரும் டேப் பி11 (Lenovo Tab P11) மாடலானது 51 சதவீத தள்ளுபடிக்கு பிறகு ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஹார்டு டிரைவ் உடன் வரும் லெனோவா டேப் எம்10 (Lenovo Tab M10) மாடலானது 53 சதவீத தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications