இந்தியாவில் வேகமாய் வளர்ந்து வரும் லெனோவோ, ஆப்பிள்.!!

Written By:

ஒவ்வொரு ஆண்டும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது 12% வளர்ச்சியை அடைந்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரையில் மொத்தம் 24.4 மில்லியன் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டாப் 5

1

அதன் படி இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் சாம்சங், மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், லெனோவோ மற்றும் லாவா உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. பட்ஜெட் விலையில் தலைசிறந்த கருவிகளை விற்பனை செய்து லெனோவோ நிறுவனம் இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது.

சர்வதேச நிறுவனங்கள்

2

இந்திய சந்தையில் விலை குறைந்த கருவிகளின் மோகம் அதிகம் என்பதால் உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களாக இருக்கும் மைக்ரோசாஃப்ட், ப்ளாக்பெரி, சோனி மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள்அதிகப்படியான நட்டத்தை சந்தித்தன.

மாற்றங்கள்

3

கடந்த 18 மாதங்களாக இந்திய சந்தையில் அதிகப்படியான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றது. ஆன்லைன் சேனல்களின் வரவு அதிகரிப்பு, புதிய சர்வதேச நிறுவனங்களின் வரவு அதிகரிப்பு, எல்டிஇ மற்றும் அதிக தரம் கொண்ட கருவிகள் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மைக்ரோமேக்ஸ்

4

புதிய விற்பனையாளர்களின் வரவு இந்திய நிறுவனங்களை அதிகமாக பாதித்திருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சில புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

இரண்டாம் இடம்

5

இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் 56% கருவிகளின் விநியோகத்தை அதிகரித்திருக்கின்றதோடு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நிறுவனமாகவும் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலின் முதல் இடத்தில் லெனோவோ நிறுவனம் இருக்கின்றது.

மேலும் படிக்க

6

ரிலையன்ஸ் 4ஜி : அதுக்கு என்ன ஜி.??

இன்ஸ்டாகிராமில் பிழை : 10 வயது சிறுவனக்கு ஆறு லட்சம் வழங்கிய ஃபேஸ்புக்.!!

முகநூல்

7

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Lenovo, Apple fastest growing smartphone vendors in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot