இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகின்றது லெனோவோ ஏ7000

Posted By:

லெனோவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் லெனோவோ ஏ7000 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் சவுன்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட லெனோவோ ஏ7000, 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் சிப்செட் மற்றும் 2ஜிபி ராம் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகின்றது லெனோவோ ஏ7000

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆடடோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

டூயல் சிம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G LTE, Wi-Fi, GPS/ A-GPS, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இருப்பதோடு 2900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

 

English summary
Lenovo A7000 smartphone to launch in India on 7 April
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot