Home
News

இந்தியாவில் ரூ.8,999க்கு வெளியானது லெனோவோ ஏ7000

லெனோவோ நிறுவனம் ஏ7000 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.8,999க்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது. இதன் முன்பதிவுகள் இன்றே துவங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ப்ளாஷ் விறப்னை குறித்து லெனோவோ கூறும் போது, "விற்பனைக்காக 4 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. லெனோவோ ஏ7000 ரூ.8,999 விலைக்கு விற்பனை செய்யப்பட முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்" என தெரிவித்துள்ளது.

லெனோவோ ஏ7000 இந்தியாவில் ரூ.8,999 தாங்க..

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறகிமுகப்படுத்தப்பட்ட லெனோவோ ஏ7000 விலை இந்தியாவில் ரூ.10,400 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. லெனோவோ ஏ7000, 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் சிப்செட் மற்றும் 2ஜிபி ராம் கொண்டிருக்கின்றது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

டூயல் சிம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G LTE, Wi-Fi, GPS/ A-GPS, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இருப்பதோடு 2900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Lenovo on Tuesday launched the A7000 smartphone in India, pricing it at Rs. 8,999. The smartphone will be available from April 15 exclusively via Flipkart.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X