Home
News

லெனோவோ ஏ6000 வாங்குபவர்கள் இந்த தேதியில உடனே வாங்கிடுங்க

By Meganathan

ஆன்லைன் சந்தையில் ப்ளாஷ் விற்பனை மூலம் நொடிகளில் விற்று தீர்ந்து விடும் லெனோவோ ஏ6000 வரும் நாட்களில் ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு இன்றி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் மார்ச் 25 வரை லெனோவோ ஏ6000 எவ்வித முன்பதிவும் இன்றி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ப்ளிப்கார்ட் தளத்தில் மற்ற பொருட்களை வாங்குவதை போல வாங்க முடியும்.

லெனோவோ ஏ6000 வாங்குபவர்கள் இந்த தேதியில உடனே வாங்கிடுங்க

இதன் மூலம் லெனோவோ நிறுவனம் இந்தியாவில் மட்டும் 180000 யுனிட்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக குறைந்த விலை மற்றும் சிறந்த சிறப்பம்சங்கள் இருப்பதே ஆகும். மேலும் சியோமி போன்று ப்ளாஷ் விற்பனையும் இதன் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருப்பதோடு வெற்றி பெறவும் உதவி இருக்கின்றது.

லெனோவோ ஏ6000 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 64-பிட் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸரும் கொண்டுள்ளது. மேலும் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருப்பதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

Best Mobiles in India

English summary
Lenovo A6000 will sell without any registrations. Lenovo A6000 smartphone which was going out of stock in seconds through its regular flash sales will be available without any registrations soon.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X