முன்பதிவு இல்லாமல் லெனோவோ ஏ6000 ப்ளஸ் வாங்கிடுங்க
லெனோவோ நிறுவனம் பிரபலமான ஏ6000 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு இல்லாமல் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஏ6000 ப்ளஸ் ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

இந்த நேரடி விற்பனையானது வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கின்றது. இரு நாள் விற்பனையை தொடர்ந்து இந்த போனின் ப்ளாஷ் விற்பனை ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய லெனோவோ ஏ6000 ப்ளஸ் 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது. இதோடு 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 720*1280 பிக்ஸல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளதோடு 64 பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் கொண்டுள்ளது.

டூயல் சிம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.
டால்பி டிஜிட்டல் ப்ளஸ் கொண்ட டூயல் ஸ்பீக்கர் மற்றும் 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2ஜி, 3ஜி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications