5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவோ ஏ5000 வெளியிடப்பட்டுள்ளது
லெனோவோ நிறுவனம் ஏ சீரிஸ் வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. லெனோவோ ஏ5000 என்ற இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரஷ்யாவில் கிடைக்கின்றது, இந்திய மதிப்பில் ரூ.14,500க்கு இந்த போன் அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
புதிய லெனோவோ ஏ5000, 4000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றதோடு 3ஜி சேவை மற்றும் க்லிக் சார்ஜ் ததொழில்நுட்பம் மூலம் 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 3 மணி நேர பேக்கப் வழங்கவும் செய்கின்றது.

டூயல் சிம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மற்றும் 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபிரேம், மற்றும் 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. 8 எம்பி ப்ரைமரி ஆட்டோபோக்ஸ் கேமரா, எல்ஈடி ப்ளாஷ் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
இதோடு 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n, GPS/ A-GPS, மைக்ரோ யுஎஸ்பி, மற்றும் பல கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications