பேட்டரி பவர் 7500 எம்ஏஎச்: தகுந்த விலையில் அட்டகாச லெனோவா டேப் பி11 அறிமுகம்!

|

இந்தாண்டின் தொடக்கத்தில், லெனோவா உலகளாவிய சந்தைகளில் டேப் பி11 ப்ரோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதன்படி நிறுவனம் தற்போது டேப் பி 11 சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதில் கண் பராமரிப்பு முறை தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது டியூவி ரைன்லேண்ட் சான்றிதழை பெற்றிருக்கிறது.

பேட்டரி பவர் 7500 எம்ஏஎச்: தகுந்த விலையில் அட்டகாச லெனோவா டேப் பி11

லெனோவா டேப் பி11 உறுதிசெய்யப்பட்டபடி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெனோவா டேப் பி11 இந்திய வெளியீடானது அமேசான் பிரைம் தின விற்பனையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சாதனமாகும். வாக்குறுதிப்படி இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனமானது க்ரே வண்ண விருப்பத்தில் ரூ.24,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லெனோவா டேப் பி11 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம், லெனோவா டேப் பி11 11 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 2000 x 1200 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. 85% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் 400 நிட்ஸ் பிரகாச அம்சங்களை கொண்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளபடி இந்த சாதனம் கண் பராமரிப்பு சான்றிதழ் அம்சத்தோடு வருகிறது. லெனாவாவில் இருந்து வரும் டேப்லெட் 11 என்எம் செயல்முறை அடிப்படையில் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

லெனோவா டேப் பி11 கூகுளின் கிட்ஸ் ஸ்பேஸ் உடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குகிறது. முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் 13 எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா சென்சார் இருக்கிறது. எல்இடி ஃபிளாஷ் அம்சத்தோடு வருகிறது. இதில் குவாட் ஸ்பீக்கர்கள், இரட்டை மைக்ரோஃபோன் மற்றும் டால்பி அட்மோஸ் உடன் வருகிறது.

இணைப்பு ஆதரவை பொறுத்தவரை லெனோவா டேப் பி11 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.1, டைப் சி போர்ட் மற்றும் பல ஆதரவுகளோடு வருகிறது. 7500 எம்ஏஎச் பேட்டரி உடன் வருவது லெனோவா டேப்லெட் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதன் பேட்டரி 12 மணி நேர வீடியோ ப்ளேபேக் அம்சத்தோடு வருகிறது.

லெனோவா டேப் பி11 சாதனமானது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது. கேலக்ஸி டேப் ஏ7 உடன் ஒப்பிடும் போது லெனோவா டேப்லெட்டில் சற்று பெரிய டிஸ்ப்ளே மற்றும் திறமையான செயலி வசதியோடு வருகிறது. டேப் வாங்க விரும்புவோருக்கு லெனோவா டேப் பி11 சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenova Tab P11 Launched in India With 7500 mAH Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X