ராக்கெட் மாதிரி வேகம்- 22 ஜிபி ரேம், 640 ஜிபி ஸ்டோரேஜ், டூயல் எக்ஸ் மோட்டார் வசதி: லெனோவா லெஜியன் ஒய்90!
லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ராக்கெட் மாதிரி வேகம்- 22 ஜிபி ரேம், 640 ஜிபி ஸ்டோரேஜ், 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனானது ஹாப்டிக் பின்னூட்டத்திற்கு இரட்டை எக்ஸ் ஆக்சிஸ் மோட்டார்கள், 64 மெகாபிக்சல் முதன்மை கேமராக்கள் வசதியோடு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போன்
லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனானது வரவிருக்கும் புதிய கேமிங் ஸ்மார்ட்போனாகும். இந்த சாதனத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் வீடியோ சமீபத்தில் நிறுவனத்தால் டீஸ் செய்யப்பட்டது. சீன தொழில்நுட்ப நிறுவனமான லெனோவா இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகளை நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு விவரக்குறிப்புகள் குறித்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தகவல் வெய்போவில் வெளியாகி இருக்கிறது. இந்த கேமிங் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 22 ஜிபி ரேம் மற்றும் 640 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இணைக்கப்படும் என கூறப்படுகிறது.

லெனோவா லெஜியன் ஒய்90: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்
இதுகுறித்து டிப்ஸ்டர் பகிர்ந்த பதிவின்படி, லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனானது 6.92 இன்ச் இ4 சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வரும் எனவும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் என கூறப்படுகிறது. கூடுதலாக கேமிங் அனுபவத்திற்கு என இந்த டிஸ்ப்ளேவின் 720 ஹெர்ட்ஸ் வரையிலான டச் மாதிரி விகித்தை கொண்டிருக்கும் எந கூறப்படுகிறது. ஹூட்டின் கீழ் இந்த லெனோவா கேமிங் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 ஜிபி ரேம், 640 ஜிபி உள்சேமிப்பு
வெளியான தகவலின்படி, லெனோவா லெஜியன் ஒய்90 கேமிங் ஸ்மார்ட்போனானது 22 ஜிபி ரேம், 18 ஜிபி பிசிகல் ரேம் மற்றும் 4 ஜிபி மெய்நிகர் நினைவகத்தோடு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 640 ஜிபி உள்சேமிப்பு அதாவது (512 ஜிபி + 128 ஜிபி) ஒருங்கிணைந்த சேமிப்பகத்திற்கு இரண்டு சேமிப்பு ஸ்டிக் உடன் வரும் கூறப்படுகிறது. 68 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை இது கொண்டிருக்கும் எனவும் 5600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் ஓவி64ஏ முதன்மை சென்சார் கொண்டிருக்கும் எனவும் 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 44 மெகாபிக்சல் ஜிஎச்1 செல்பி கேமரா இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

ஃப்ரோஸ்ட் ப்ளேட் 3.0 கூலிங் சிஸ்டம்
லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனின் கூடுதல் கேமிங் அம்சங்களும் பகிரப்பட்டிருக்கிறது. ஹாப்டிக் பின்னூட்டத்திற்கு என இரட்டை எக்ஸ் ஆக்சிஸ் மோட்டார்கள் பேக் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரட்டை பேன் வசதியுடன் கூடிய ஃப்ரோஸ்ட் ப்ளேட் 3.0 கூலிங் சிஸ்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. கூடுதலாக இந்த கேமிங் ஸ்மார்ட்போனில் கேமிங் ஆதரவுக்கு என பிரத்யேகமான ஆறு பட்டன்கள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

144 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே
144 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் ஏர் கூலிங் ஆதரவோடு லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் எனவும் இதன் வெளியீட்டு தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. கேமிங் பிரியர்களும் தங்களது சாதனத்தை வாங்கும் அதன் அம்சங்களில் சமரசம் இன்றி வாங்குகின்றனர். ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி வரவிருக்கும் லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களையும், வெளியீட்டு தேதி குறித்த தகவல்களையும் பார்க்கலாம்.

புதிய கேமிங் ஸ்மார்ட்போன்
கேமிங் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. குறிப்பாக லெனோவா, ஆசஸ், ஐக்யூ போன்ற பிராண்டுகள் தொடர்ந்து கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு புதிய கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட லெனோவா தயாராகி வருகிறது. புதிய லெனோவா கேமிங் ஸ்மார்ட்போனானது 2022 ஜனவரி 1 ஆம் தேதி சிறந்த சக்தி வாய்ந்த அம்சங்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

6.92 இன்ச் இ4 அமோலெட் டிஸ்ப்ளே
லெனோவா லெஜியன் ஒய் 90 வெளியீடு டீஸ் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் லெஜியன் ஸ்மார்ட்போனின் விவரங்களை லெனோவா வெய்போவில் தெரிவிக்கப்பட்டதை பார்க்கலாம். அதிகாரப்பூர்வ வால்பேப்பர்படி, புதிய லெனோவா லெஜியன் ஒய் 90 முதலில் சீனாவிலும் பின் உலக சந்தையிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.பிராண்டின் மூலம் பகிரப்பட்ட வெய்போ பதிவில், லெனோவா லெஜியன் ஒய்90 ஸ்மார்ட்போனின் அதிக விவரக்குறிப்புகளை பகிர்ந்து கொள்ளவில்லை. நிறுவனம் பகிர்ந்துள்ளபடி இது கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் இதன் காட்சி விவரங்கள் ஆனது லெனோவா லெஜியன் 6.92 இன்ச் இ4 அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி உடன் 720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித்துடன் வருகிறது. லெனோவா லெஜியன் ஒய் 90 ஸ்மார்ட்போனானது கூடுதலாக கேமிங் ஆதரவோடு எச்டிஆர் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த அம்சம் ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications