தீயாய் டவுன்லோட்டாகும் Lemon8 ஆப்ஸ்! இது என்ன டேட்டிங் ஆப்ஸ்-ஆ? இல்லை வேற எதுவுமா?
அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளில் Lemon8 என்ற மொபைல் ஆப்ஸை மக்கள் தீயாய் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். இதுவரை இல்லதாக அளவில், திடீரென மக்கள் இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்ய காரணம் என்ன? இது என்ன மாதிரியான ஆப்ஸ்? இதோ உண்மை.
Lemon8 என்ற மொபைல் ஆப்ஸ் இப்போது மிகவும் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. அமெரிக்காவில் இப்போது, அதாவது இந்த மாத கணக்கின் படி, அதிகப்படியான பதிவிரகங்களை பெற்ற மோஸ்ட் டவுன்லோடட் மொபைல் ஆப்ஸ் ஆக இந்த Lemon8 ஆப்ஸ் திகழ்கிறது. இந்த பதிவை எழுதும் நேரத்தில், இதன் ஒட்டுமொத்த டவுன்லோட் எண்ணிக்கை கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) 5 மில்லியனை தாண்டி சென்றுகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lemon8 என்ற இந்த ஆப்ஸ் ஒன்றும் புதியதல்ல, ஆனால் இது இப்போது அமெரிக்கர்களை கவர்ந்துள்ளது. Lemon8 ஆப்ஸ் முதலில் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்டது. லெமன் 8 என்பது, இளம் பெண்களிடையே பெரிதும் பிரபலமாக இருக்கும் Xiaohongshu (அல்லது லிட்டில் ரெட் புக்) எனப்படும் பிரபலமான சீன லைஃப்ஸ்டைல் பயன்பாட்டிற்கு நிகரானது. இது ஒரு ByteDance இன் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
பைட்டான்ஸ் என்ற பெயரை எங்கேயோ கேட்டது போல் தெரிகிறதா? TikTok என்ற உலக பிரபலமான ஆப்ஸை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் தான் பைட்டான்ஸ். ஒரு வேலை நீங்கள் மறந்திருந்தால், உங்களுக்கு இந்த பெயரை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம். டிக்டாக் உடன் பைட்டான்ஸ் உருவாக்கிய மற்றொரு மொபைல் ஆப்ஸ் தான் இந்த Lemon8 ஆகும். இது இப்போது, கிழக்கு ஆசியா முழுவதும் 5 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் குவித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில் திருட்டுத்தனமாக தொடங்கப்பட்டது. ஏனெனில் தரவு தனியுரிமைக் கவலைகள் தொடர்பாக டிக்டோக் அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது மக்களிடையே பிரபலமடைய என்ன காரணம்? Lemon8 இல் அப்படி என்ன இருக்கிறது? இது என்ன டேட்டிங் ஆப்ஸ்-ஆ? என்று பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும். முதலில் இது ஒரு டேட்டிங் ஆப்ஸ் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த Lemon8 ஆப்ஸ் ஒரு வகையில் "Pinterest மற்றும் Instagram" ஆகிய இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு தளமாக காட்சியளிக்கிறது. இன்ஸ்டாகிராமின் புகைப்படப் பகிர்வின் சிறந்த அம்சங்களையும், Pinterest இல் நீங்கள் காணக்கூடிய விஷயங்களின் வகையையும் ஒருங்கிணைத்து, Lemon8 உள்ளடக்கங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு சமூக ஊடக பயன்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோஸ் மற்றும் போட்டோஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, டிக்டாக் போன்ற UI மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
உணவு, ஃபேஷன், ஆரோக்கியம் மற்றும் பயணம் போன்ற வாழ்க்கை முறை உள்ளடக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நீண்ட வலைப்பதிவு-பாணி இடுகைகளையும் Lemon8 அனுமதிக்கிறது. ஆரம்ப நிலையில் இருந்தும் இன்னும் முழுமையாக தொடங்கப்படாத நிலையில், Lemon8 ஷாப்பிங்கிற்கான ஒரு நுட்பமான தளமாக உருமாறி வருகிறது. இது பயனர்களை ஷாப்பிங் செய்யவும் அனுமதிக்கிறது.
இந்த Lemon8 ஆப்ஸ் பயன்பாடு விளம்பரப்படுத்தப்பட்ட படி செயல்படுகிறது.மேலும் Lemon8 இல் மோசடி அல்லது சில உளவு மென்பொருள் சேவைகளை இது கொண்டுள்ளதா என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், இந்த செயலி டிக்டோக்கின் அதே அல்காரிதத்தை பகிர்ந்து கொள்கிறது என்பதனால் அமெரிக்கா இப்போது இந்த ஆப்ஸை ஆராய்ந்து வருகிறது. இது இந்தியர்களுக்கு இப்போது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications