தொலைக்காட்சி சந்தையில் களம் காணும் புதிய நிறுவனம்.!!

Written By:

தொலைக்காட்சி பெட்டிகள் நமக்குப் பல தசாப்தங்களாக நமக்குப் பொழுதுபோக்கு அம்சமாக இருக்கின்றது. இந்தக் கருவி குடும்பத்தை ஒரே இடத்தில் இணைப்பதோடு நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கின்றது.

தொலைக்காட்சி சந்தையில் களம் காணும் புதிய நிறுவனம்.!!

கால மாற்றத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் பல்வேறு மாற்றங்களைக் கண்டு இன்று ஸ்மார்ட் டிவி மற்றும் அதீத துல்லிய படங்களை வழங்கும் யுஎச்டி ரெசல்யூஷன் டிவி வரை நீள்கின்றது.

நாளுக்கு நாள் தொலைக்காட்சி பெட்டிகளின் தேவை அதிகரிக்கின்ற நிலையில் புதிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று புதிய வகை தொலைக்காட்சிகளுடன் சந்தையில் நுழைந்திருக்கின்றது. இந்நிறுவனம் சூப்பர் டிவி வகைகளை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

தொலைக்காட்சி சந்தையில் களம் காணும் புதிய நிறுவனம்.!!

இந்தியாவில் சராசரி பயனாளி ஒருவர் கிட்டதட்ட 3 மணி நேரம் வரை தொலைக்காட்சிகளை பார்ப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லீஇகோ நிறுவனம் சூப்பர் டிவி வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கின்றது.

குறைந்த விலையில் கருவிகளை வழங்குவதில் பெயர் பெற்ற லீஇகோ நிறுவனம் தனது சூப்பர் டிவி வகைகளின் விலையையும் அவ்வாறே நிர்ணயம் செய்துள்ளது.

English summary
LeEco all set to bring Evolution of TV in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot