புதிதாக 10 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்கிறது லீஈக்கோ
புதிய தயாரிப்புகளை வெளியிடுவதில் சமீபகாலமாக லீஈக்கோ நிறுவனம் அமைதி காத்து வந்தது. அந்நிறுவனத்தின் பல ஃபோன்கள் ஆன்லைனில் கசிந்த போதும், அதில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அல்லது மற்றொரு தயாரிப்பு, இதுவரை வெளியானதாக எங்களுக்கு தெரியவில்லை.

அறிமுகத் தேதியை நிர்ணயிப்பதில் இந்நிறுவனம் பின்தங்கி காணப்படுவதன் முக்கிய காரணம், சமீபகாலமாக அந்நிறுவனம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியாக இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால் கடந்த சில வாரங்களாக, இந்நிறுவனத்திற்கு கணிசமான அளவு முதலீடு கிடைத்துள்ளதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். எனவே லீஈக்கோ மீண்டும் வணிகத்திற்கு திரும்பும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவிற்கு விரைவில் அது சம்பவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் பரபரப்பான வளர்ச்சி பாதையாக, சீனாவைச் சேர்ந்த உண்மையான உபகரண உற்பத்தியாளர் (OEM) என்ற நிலை மாறி, இந்நிறுவனம் 10 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு இனிய செய்தியாக ரசிகர்களுக்கு அமையலாம். இந்த வகையில், லீஈக்கோ நிறுவனம் புதிய சில ஸ்மார்ட் டிஜிட்டல் டிவிக்களை, உள்ளூர் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
மற்றொருபுறம், இதுவரை எந்த ஸ்மார்ட்போன்களும் வெளியிடப்படாமல் இருப்பதை எண்ணி வருந்தும் லீஈக்கோவின் ரசிகர்கள், ஒரு புதிய ஃபோனுக்காக காத்திருக்கிறார்கள். இந்நிறுவனம் ஒரு புதிய தலைமையின் கீழ் வந்துள்ளதைத் தொடர்ந்து, லீஈக்கோவிற்கும் அப்படியொரு திட்டம் காணப்படலாம். இப்போதைக்கு புத்துணர்ச்சியுடன் உள்ள இந்த தொழிற்நுட்பம் நிறுவனம் அறிவித்துள்ள புதிய தயாரிப்புகளைக் குறித்து காண்போம்.
இந்த டிவிக்களைக் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில், அவற்றின் திரை அளவுகளைக் குறிக்கும் வகையில், எக்ஸ்40எல் / எக்ஸ்43எல் / எக்ஸ்50எல் / எக்ஸ்55எல் / எக்ஸ்65எல் / என்று அறியப்படுகிறது. இதில் எக்ஸ்40என் / எக்ஸ்43என் / எக்ஸ்50என் / எக்ஸ்55என் / எக்ஸ்65என் என்ற ஒரு என் சீரிஸ் மாடலும் உட்படுத்தப்பட்டுள்ளது.
விலையை பொறுத்த வரை, துவக்க மாடலுக்கு 1899 யென் (தோராயமாக ரூ.18,570) என்று தொடங்கி, பெரிய 65 இன்ச் மாடலுக்கு 5799 யென் (தோராயமாக ரூ.56,708) வரை காணப்படுகிறது.
இதை தவிர ஹெச்டிஆர் தொழிற்நுட்பம் மற்றும் க்வாட்-கோர் மோட்டார் செயலிகள் உள்ளிட்ட மற்ற அம்சங்களும் இதில் காணப்படுகின்றன. எல்லா வகையான டிவிகளிலும் 16 ஜிபி உள்ளக நினைவகம் காணப்படுவதோடு, இந்த டிவி திரைக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட லீஈக்கோவின் இயூஐ 6.5 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இது இயங்குகிறது. இந்த புதிய தயாரிப்புகளைக் குறித்த கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம்.


Click it and Unblock the Notifications