Home
News

விற்பனையில் முன்னிலை வகிக்கும் சூப்பர் டிவி!

By Meganathan

சூப்பர் போன் கருவிகளைத் தொடர்ந்து லீஇகோ நிறுவனம் தொலைக்காட்சி சந்தையிலும் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. சூப்பர் 3 சீரிஸ் வகைகளை அறிமுகம் செய்ததும் 55 இன்ச் தொலைக்காட்சி விற்பனையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

இதோடு இந்தியளவில் 4கே டிவிக்களில் முதலிடம் பிடித்திருக்கின்றது. ஸ்மார்ட் டிவி பிரிவிலும் லீஇகோ நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்ந்து வருகின்றது.

தனித்துவம்

தனித்துவம்

அதிக தரம், குறைந்த விலை மட்டுமில்லாமல் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவம் போன்றவை லீஇகோ நிறுவனத்தை மற்ற நிறுவனங்களில் இருந்து தனித்துவம் வாய்ந்ததாக வெளிப்படுத்துகின்றது.

விற்பனை

விற்பனை

லீஇகோ நிறுவனத்தின் சூப்பர் 3 சீரிஸ் தொலைக்காட்சிகள் பிளிப்கார்ட் மற்றும் லீமால் தளத்தில் அதிகப்படியான வரவேற்பு பெற்றிருக்கின்றது. மூன்று மாடல் தொலைக்காட்சிகளும் ரூ.9,800 மதிப்புடைய இரண்டு ஆண்டு லீஇகோ சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது.

திரை

திரை

சூப்பர் 3 சீரிஸ் வகை தொலைக்காட்சி பெட்டிகள் முப்பரிமாண அம்சங்களை ஒத்துழைக்கும் சூப்பர்3 மேக்ஸ்65 தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இவை இந்தியாவில் ஆகஸ்டு 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

விற்பனை

விற்பனை

இந்தக் கருவிகளுக்கான இணைய முன் விற்பனை ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கியது. இவை பிளிப்கார்ட் மற்றும் லீமால் தளத்தில் நடைபெற்றது.

விலை

விலை

சூப்பர் டிவிக்களின் விலையைப் பொருத்த வரை சூப்பர் எக்ஸ்55 - 55 செ.மீ திரை கொண்ட தொலைக்காட்சி பெட்டி ரூ.59,790, லீஇகோ சூப்பர்3 எக்ஸ்65 - 65 செ.மீ திரை கொண்ட மாடல் ரூ.99,790 மற்றும் சூப்பர்3 எக்ஸ்65 - 65 செ.மீ திரை ரூ.1,49,790 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LeEco 55-inch SuperTV leads its category on 1st presale day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X