LED TV வெடித்து சிதறி உயிரிழந்த சிறுவன்.. டிவிகள் வெடிக்க காரணங்கள் தெரியுமா?
காஜியாபத்தில் எல்இடி டிவி வெடித்து சிதறியதில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். டிவி வெடித்ததில் ஒரு பக்க சுவரே சேதமடைந்திருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஸ்மார்ட் டிவி வெடிக்க காரணம் என்னவென்று தெரியுமா?

உயிரிழந்த 16 வயது சிறுவன்..
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் எல்இடி டிவி வெடித்ததில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் குறித்த தகவல்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே ஒரு ஸ்மார்ட்டிவி வெடித்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது சற்று வியப்படையதான் வைக்கிறது.

ஸ்மார்ட்டிவி எப்படி வெடித்தது?
ஸ்மார்ட்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது சூடாகி வெடித்துவிட்டது, ஸ்மார்ட்போனை பையில் வைத்திருக்கும் போது வெடித்துவிட்டது. இரவு முழுவதும் சார்ஜ் செய்த நிலையில் இருந்ததால் ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது போன்ற பல நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம்.
இங்கே ஒரு ஸ்மார்ட்டிவி வெடித்தது என்பது பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

நண்பர் வீட்டுக்கு டிவி பார்க்க சென்ற சிறுவன்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் எல்இடி டிவி பொருத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த டிவியை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதில் இருவர் காயமடைந்ததோடு ஒரு சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது.
உயிரிழந்த சிறுவன் பெயர் ஓமேந்திரா என கூறப்படுகிறது. காசியாபாத்தில் உள்ள ஹர்ஷ் விஹார் காலணியில் உள்ள தனது நண்பரான கரண் என்பவரது வீட்டில் ஓமேந்திரா டிவி பார்க்கச் சென்றுள்ளார்.

சேதமடைந்த வீட்டின் சுவர்..
ஓமேந்திரா தனது நண்பர் வீட்டில் அவருடன் டிவி பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டிவி வெடித்ததில் வீட்டுச் சுவரின் ஒரு பகுதியே சேதமடைந்துள்ளது.
எல்இடி டிவி வெடித்த விபத்தில் காயமடைந்த ஓமேந்திரா, கரண் மற்றும் அவரது தாயார் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..
எல்இடி டிவி வெடித்த விபத்தில் காயமடைந்த மூவரும் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஓமேந்திரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கரண் மற்றும் அவரது தாயாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிர்ந்து போன வீடு..
எல்இடி டிவி வெடித்த விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும், இதில் முழு வீடும் அதிர்ந்தது எனவும் சுவரின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன எனவும் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் விவரத்துள்ளதாக கூறப்படுகிறது.
எல்இடி டிவி வெடித்ததற்கான காரணம் இன்னும் முழுமையாக விளக்கவில்லை. இருப்பினும் ஸ்மார்ட்டிவிகள் வெடிக்க பொதுவான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

எல்இடி டிவி வெடிக்க காரணம் என்ன?
ஸ்மார்ட்டிவியை உயர்தர பவர் பாயிண்ட்களை பயன்படுத்தி உபயோகிக்கவும். பயன்பாட்டில் இல்லாதபோது டிவியை பவர் ஆஃப் செய்து வைக்கவும். இதன்மூலம் உங்களது கரண்ட் பில்லும் குறைய வாய்ப்பிருக்கிறது.
உங்கள் ஸ்மார்ட்டிவியுடன் இணைக்கப்பட்ட வெளிப்புற சாதனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளவும். அதாவது பென் டிரைவ், வைஃபை, ப்ளூடூத், எச்டிஎம்எல் கேபிள், கேபிள் கனெக்ஷன் என பல இணைப்புகள் ஒரே நேரத்தில் கையாளப்பட்டிருக்கிறதா, எத்தனை இணைப்புகள் என்ற விவரத்தை சரிபார்த்துக் கொள்ளவும்.

எலெக்ட்ரானிக்ஸ் சாதனமும், வெப்பமும்..
உங்கள் ஸ்மார்ட்டிவி இருப்பிடத்தின் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளவும். அதாவது உங்கள் டிவி ஜன்னல் போன்ற இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், நேரடியாக வெளிப்புற வெப்பம் டிவியை சென்றடையும்.
அதேபோல் பொருத்தப்பட்டிருக்கும் சுவரின் பின்புறத்தில் வெயில் படும் பட்சத்தில் சுவரின் வெப்பம் டிவியை சென்றடையும். அப்படி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
டிவியின் அருகில் மெழுகுவர்த்திகள் போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்க வேண்டாம். பொதுவாகவே எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் அதிக வெப்பத்துக்கும் ஆகாது என்பதை நினைவில் கொள்க.
image: Social Media


Click it and Unblock the Notifications








