வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்!

|

உலகளவில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் ஒரே செயலி வாட்ஸ் ஆப் செயலி மட்டும் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இலவச மெசேஜிங் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாட்ஸ் ஆப் செயலியில் தற்பொழுது ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் சேவை

வாட்ஸ் ஆப் சேவை

குறிப்பாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்ள, வாய்ஸ் காலிங் சேவை, வீடியோ கால்லிங் சேவை, குரூப் சாட் சேவை போன்ற பல சேவைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. வெகு விரைவில் வாட்ஸ் ஆப் செயலியில் கூகுள் பே போல பேமெண்ட் சேவையும் களமிறங்கவுள்ளது.

2 பில்லியன் வீடியோ கால்

2 பில்லியன் வீடியோ கால்

வாட்ஸ் ஆப் செயலியில் நாள் ஒன்றிற்கு சுமார் 2 பில்லியன் வீடியோ கால் அழைப்புகளை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறது கணிப்பு. இந்நிலையில் வீடியோ கால்லிங் சேவைக்கு வரி விதிக்கப்பட்டதால் லெபனான் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.வியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.

கட்டாய வரி

கட்டாய வரி

லெபனான் அரசு, தனது நாட்டில் பயன்படுத்தப்படும் வீடியோ கால்லிங் சேவைகளுக்கு வரி விதித்தது. குறிப்பாக வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் பேஸ் டைம் போன்ற செயலிகளுக்குக் கட்டாய வரி விதியை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

வரியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வரியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியக் கணக்கின்படி அரசு விதித்துள்ள வரி மதிப்பு ரூ.14 ஆகும். இந்த வரி தேவையற்றது என்று அந்நாட்டு அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் கலவரம் வெடித்தது.

அரசின் அறிவிப்பு

அரசின் அறிவிப்பு

இந்நிலையில் மக்கள் தொடர்ந்து போராடி வந்த காரணத்தினால், வீடியோ கால்லிங் சேவைக்கென்று வழங்கப்பட வரியை லெபனான் அரசு ரத்து செய்துவிட்டது. அரசின் இந்த அறிவிப்பிற்குப் பின்னர் தான் மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lebanon scraps WhatsApp tax as protests rage whats the reason : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X