TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

|

உங்கள் வீட்டில் உள்ள ஏசி மற்றும் டிவி சாதனங்களை வெறும் ரிமோட் மூலம் மட்டும் OFF செய்கிறீர்களா? இப்படி செய்தால், உங்கள் AC மற்றும் Smart Tv சாதனங்கள் ஆஃப் நிலைக்குச் சென்றுவிடும், அதற்குப் பின் மின்சாரத்தை உறிஞ்சாது என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் கணிப்பு மிகவும் தவறானது. அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுக்கே தெரியாமல்,

வாம்பைர் பவர் லாஸ்-ஆ! அப்படினா என்ன?

வாம்பைர் பவர் லாஸ்-ஆ! அப்படினா என்ன?

இந்தியாவிற்குள் பெருகி வரும் 'வாம்பைர் பவர் லாஸ்' (Vampire power loss) சிக்கலில் நீங்களும் சிக்கிப் பலியாகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை. ஆம், வாம்பைர் பவர் லாஸ் சிக்கலில் சிக்கி, கூடுதல் மின்சார கட்டணத்தைச் செலுத்தும் அந்த அப்பாவி நபர்களில் நீங்களும் ஒருவராகிவிட்டீர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை. வாம்பைர் பவர் லாஸ்-ஆ! அப்படினா என்ன? என்று அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

AC மற்றும் Tv-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா?

AC மற்றும் Tv-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா?

உங்கள் வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனரை ரிமோட் மூலம் மட்டும் OFF செய்துவிட்டு, வோல்டேஜ் ஸ்டேபிலைசரை அப்படியே ON இல் விட்டுச் செல்கிறீர்களா? அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவியோ அல்லது சாதாரண டிவியோ, அவற்றையும் ரிமோட்டின் மூலம் மட்டும் பயன்படுத்தி OFF செய்துவிட்டு, உங்கள் செட்-டாப் பாக்ஸை ON இல் விட்டுச் செல்கிறீர்களா? எப்போதும், உங்கள் எலக்ட்ரிக் சாதனங்களின் சுவிட்ச்சை OFF செய்யாமல் அப்படியே விட்டுவிடுகிறீர்களா?

சுவிட்சை அணைக்க மறந்துவிட்டீர்களா?

சுவிட்சை அணைக்க மறந்துவிட்டீர்களா?

இந்த கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்விக்குக் கூட உங்களின் பதில் 'ஆம்' என்று பதிலளித்தால், நிச்சயமாக நீங்கள் 'வாம்பைர் பவர் லாஸ்' உறிஞ்சி சிக்கலுக்குப் பலியாகிவிட்டீர்கள் என்பது பொருள். ரிமோட்டில் மட்டும் இந்த சாதனங்களை நீங்கள் ஆஃப் செய்துவிட்டு, இவற்றின் பவர் சுவிட்சை அணைக்க மறந்திருந்தால், உங்களுக்கே தெரியாமல், இந்த சாதனங்கள் தொடர்ந்து கணிசமான அளவு மின்சாரத்தை உட்கொள்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டில் நிகழும் வாம்பைர் பவர் லாஸ்

உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டில் நிகழும் வாம்பைர் பவர் லாஸ்

உங்களுக்கே தெரியாமல் உங்களிடம் இருந்து சக்தியை உறிஞ்சும் காரணத்தினால் இது வாம்பைர் பவர் லாஸ் என்று குறிப்பிடப்படுகிறது. மின்சார நுகர்வோர் ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், இந்த வகை மின் சாதனங்கள் ஸ்டான்பை மோடில் இருக்கும் போது அல்லது இவற்றின் மெயின் சுவிட்சுகள் அணைக்கப்படாமல் ஆனில் இருக்கும் போது, இவை கணிசமான அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர் வலையில் சிக்கிய மர்மமான ஆழ்கடல் உயிரினம்.. இது அதிசய மீனா இல்ல அசிங்கமான மீனா?மீனவர் வலையில் சிக்கிய மர்மமான ஆழ்கடல் உயிரினம்.. இது அதிசய மீனா இல்ல அசிங்கமான மீனா?

அதிகமான பாதிப்பு எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

அதிகமான பாதிப்பு எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

இதில், பொது மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், டிவிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் தான் என்று கூறப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இவற்றை ரிமோட் மூலம் மட்டும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, பவர் சுவிட்ச்களை அப்படியே ஆன் இல் விட்டுவிடுகிறோம். இதேபோ, மியூசிக் சிஸ்டம்களை கூட நாம் ரிமோட் மூலம் மட்டுமே அணைக்கிறோம். இன்னும், நம்மில் பெரும்பாலானோர் வாம்பைர் உறிஞ்சி சிக்கலில் சிக்குவதற்கான மற்றொரு காரணம்,

மொபைல் போன் சார்ஜர்களால் கூட பவர் லாஸ் ஆகுமா?

மொபைல் போன் சார்ஜர்களால் கூட பவர் லாஸ் ஆகுமா?

நாம் பயன்படுத்தும் மொபைல் போன் சார்ஜர்கள் தான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆம், உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய பிளக்கில் செருகிய பின், அதை அப்படியே பிளக் இல் விட்டுவிடுகிறோம். இதன் மூலமும் கூட, கணிசமான அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, போனால் போகட்டும் கணிசமான அளவு மின்சாரம் தானே என்று அலட்சியம் கொள்ளாதீர்கள். இவ்வாறு இழக்கப்படும் மின்சாரத்தின் அளவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

சொன்னால் நம்பமாட்டீர்கள்.. உங்கள் பணம் 'இவ்வளவு' விரயமாகிறது

சொன்னால் நம்பமாட்டீர்கள்.. உங்கள் பணம் 'இவ்வளவு' விரயமாகிறது

சொன்னால் நம்பமாட்டீர்கள், இவ்வாறு இழக்கப்படும் மின்சாரத்தைக் கணக்கிட்டுப் பார்த்ததில், ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய மின்சாரக் கட்டணத்தில் இருந்து ரூ. 1,000 கூடுதலாகச் செலவாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், வாம்பைர் பவர் லாஸ் மூலம் ஆண்டுதோறும் ஒரு வீட்டில் மட்டும் சுமார் 174 யூனிட் இழப்பு ஏற்படுகிறது.

174 யூனிட் மின்சாரம் உங்களிடம் இருந்தால் என்ன செய்யலாம் தெரியுமா?

174 யூனிட் மின்சாரம் உங்களிடம் இருந்தால் என்ன செய்யலாம் தெரியுமா?

இந்த 174 யூனிட் மின்சாரம் உங்களிடம் இருந்தால், இரண்டு 10 வாட் LED பல்புகளை ஒரு வருடத்திற்குத் தடையின்றி நீங்கள் இயக்கலாம். அல்லது, உங்கள் வீட்டில் உள்ள 1.5 டன் ஏர் கண்டிஷனரை 116 மணிநேரத்திற்கு மேல் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. வழக்கமான நார்மல் சாதனங்களை விட, ஸ்டான்பை மோடில் உள்ள டிவிகள், ஏசிகள் மற்றும் மியூசிக் சிஸ்டம்கள் அனைத்தும், சாதாரணமாக இயங்கும் சாதனங்களை விட அதிகளவு சக்தியைப் உட்கொள்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்

நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்

கடந்த ஆண்டு ஏழு மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், டிவி, செட்-டாப் பாக்ஸ், ஏர்கண்டிஷனர் மற்றும் சவுண்ட் சிஸ்டம்கள் ஆகிய நான்கு சாதனங்கள் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் என்பதால் அவற்றைக் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின் முடிவில், சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் உபகரணங்களை 24 மணி நேரமும் ஸ்டான்பை மோடில் இயக்குவது கண்டறியப்பட்டது. இதனால், அவர்களுக்கு பெரியளவு இழப்பு ஏற்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கூறும் உண்மை என்ன?

ஆராய்ச்சியாளர்கள் கூறும் உண்மை என்ன?

இதன் மூலம் பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கான செலவினங்கள் அதிகமாவது கணக்கிடப்பட்டுள்ளது. குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் கே விஷ்ணு ராவ், இது குறித்துக் கூறுகையில், "மக்களுக்குத் தெரியாமல் அவர்களிடம் இருந்து மின்சாரம் சத்தமில்லாமல் நுகரப்படுவதால், இதை 'வாம்பைர் பவர் லாஸ்' என்று நாங்கள் அழைக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

மக்களின் அலட்சியத்தால் பெரிய சிக்கல்

மக்களின் அலட்சியத்தால் பெரிய சிக்கல்

ஒருவேளை ஒரு யூனிட் கரண்டிற்கு ரூ.10 வசூலிக்கப்பட்டால், ஸ்டான்பை மோட் மூலம் நிகழும் மின் இழப்பின் தாக்கத்தை மக்கள் அறிவார்கள். இந்தியாவில் மின்சாரத்திற்கு நாம் கொடுக்கும் விலை குறைவாக இருப்பதால், டிவி சுவிச்சை அணைக்க மறக்கிறோம், ஏர்கண்டிஷனரின் ஸ்டெபிலைசரை அணைக்காமல் நிலைமையை எளிதாக கையாள்கிறோம் என்றும், இந்த அலட்சியத்தால் பெரிய சிக்கல் உருவாகியுள்ளது" அவர் கூறியுள்ளார்.

TANGEDCO இதுகுறித்து கூறுவது என்ன?

TANGEDCO இதுகுறித்து கூறுவது என்ன?

TANGEDCO நிர்வாக பொறியாளரின் தகவல்படி, மொபைல் போன் சார்ஜர் கூட சுவிட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருக்கும் காரணத்தினால், டிரான்ஸ்பார்மரில் சுமை அதிகரிக்கிறது. இதனால், அடிக்கடி டிரான்ஸ்பார்மர்களில் சேதம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு போன் சார்ஜர்களாவது பிளக்கில் பொருத்தப்பட்டுள்ளன, குறிப்பாக அவற்றை OFF செய்ய மக்கள் மறந்துவிடுகிறார்கள். போன் சொருகப்படாமல் இருப்பதால் மின்சாரம் பயன்படுத்தப்படாது என்பது அவர்களின் கணிப்பு.

100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்

ரிமோட் மூலம் மட்டும் உபகரணங்களை OFF செய்தால் போதாது

ரிமோட் மூலம் மட்டும் உபகரணங்களை OFF செய்தால் போதாது

ஆனால், இப்படி டிரான்ஸ்பார்மருடன் இணைக்கப்பட்ட ஒரே பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் இதே முறையைப் பின்பற்றுவதால், டிரான்ஸ்பாரம்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. சிறிய ஸ்மார்ட்போன் சார்ஜரால் இப்படி அழுத்தம் உருவாகிறது என்றால், ஸ்டான்பை மோடில் வைக்கப்படும் ஏசி ஸ்டெபிலைசர்களால் பயன்படுத்தப்படும் அழுத்தத்தை யூகித்துப் பாருங்கள். மக்கள் ரிமோட் மூலம் வீட்டு உபகரணங்களை OFF செய்தால் மட்டும் போதாது,

பிளக் சுவிட்சை நேரடியாக OFF செய்ய பழகுங்கள்

பிளக் சுவிட்சை நேரடியாக OFF செய்ய பழகுங்கள்

அவற்றை பயன்படுத்தவில்லை என்றால், நேரடியாக அதன் பவர் சப்ளையை துண்டிக்க வேண்டும். இதை சரியாக செய்ய, இனி நீங்கள் உங்களுடைய சாதனத்தின் பவர் சுவிட்சை எப்போது நேரடியாக OFF செய்து பயன்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், ஒரு ஆண்டிற்கு ரூ.1000 திற்கும் அதிகமாக உங்களுடைய மின்சார கட்டணத்திலிருந்து நீங்கள் சேமிக்க முடியும். இந்த தகவலை பற்றி மற்றவர்களுடனும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Leaving TV AC Cell Phone Charger ON Leads To Vampire Power Loss Says New Survey Report : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X