Home
News

நோக்கியா சி1 ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை நிரூபிக்கும் கான்செப்ட் லீக்ஸ்.!

சமீபத்திய கான்செப்ட் புகைப்படங்கள் மற்றும் லீக்ஸ் தகவலானது, நோக்கியா சி1 ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளதை வெளிப்படையாக காட்டுகிறது.

By Muthuraj

நோக்கியா நிறுவனம் அதன் வணிக மறுபிரவேசத்தை அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கொண்டு நிகழ்த்தவுள்ளதை நாம் அனைவருமே அறிவோம். அதை உறுதிப்படுத்தும் பல வதந்திகளும் வெளியே வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நோக்கியா டி1சி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது மக்களை விரைவில் சென்றடையும் நோக்கில் ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற லீக் தகவல் வெளியானது.

அடுத்த ஆண்டு வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பை கிளம்பியுள்ள நோக்கியா ஆண்ட்ராய்டு கருவியான நோக்கியா சி1 கருவி சார்ந்த சமீபத்திய கான்செப்ட் புகைப்படங்கள் மற்றும் லீக்ஸ் தகவலானது இக்கருவி ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளதை வெளிப்படையாக காட்டுகிறது என்றே கூறலாம்.

உண்மைக்கு மிக நெருக்கம்

உண்மைக்கு மிக நெருக்கம்

ஸ்மார்ட்போனின் புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை சீனாவின் விபோ வலைப்பதிவு பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இந்த லீக் தகவலை உற்று நோக்கினால் அது உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பது போல் தோன்றுகிறது. இதோ வெளியான லீக்ஸ் தகவல்களுடன் நோக்கியா சி1 கான்செப்ட் புகைப்படங்கள், உங்களுக்காக.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

வெளியான தகவலில் இருந்து இக்கருவி முன்பக்கம் உளிச்சாயுமோரம் கொண்ட மற்றும் பின்பக்கம் ட்ரிபிள் டோன் எல்இடி மற்றும் செனான் ஃபிளாஷ் டி கொண்ட இரண்டு எல்இடி கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்ட ஒரு பெரிய திரை சாதனமாகவே தோன்றுகிறது.

டெடிகேடட் கேமிரா பட்டன்

டெடிகேடட் கேமிரா பட்டன்

ஒரு பக்கத்தில் பவர் பட்டன் உடன் டெடிகேடட் கேமிரா பட்டன் ஒன்றும், மறுபக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல் பட்டன் இந்த நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் இடம் பெறுகிறது.

கேமிராவை மையப்படுத்திய கருவி

கேமிராவை மையப்படுத்திய கருவி

நோக்கியா சி1 கருவியானது கேமிராவை மையப்படுத்திய ஒரு கருவி என்று கூறப்படுகிறது. அதாவது வெளியான தகவல்களின் அடிப்படையில் இக்கருவி 16எம்பி + 12எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 5எம்பி முன்பக்க கேமிரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 830

ஸ்னாப்டிராகன் 830

உடன் இக்கருவி சமீபத்திய க்வால்காம் சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை, 64ஜிபி மற்றும் 128ஜிபி சேமிப்பு விருப்பங்கள் கொண்ட ஸ்னாப்டிராகன் 830 மூலம் இயக்கப்பட வேண்டும். மேலும் ஒரு 3210எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபொக்ஸ்கான்

ஃபொக்ஸ்கான்

மேலும் வெளியான தகவலின் கீழ் இக்கருவி பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.1 கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது, மற்றும் வெளியான அனைத்து தகவலும் உண்மையானதாக இருப்பின் இது அநேகமாக நோக்கியா உற்பத்தி பங்குதாரர் ஆன ஃபொக்ஸ்கான் மூலம் தயாரிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : நோக்கியா 150, நோக்கியா 150 டூயல் சிம் பீச்சர் போன்கள்.!

Best Mobiles in India

English summary
Leaked Nokia C1 concept images and specs hint a powerful smartphone. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X