ஆண்ட்ராய்டு 8.0 என்ன பெயரில், என்னென்ன மேம்பாடுகளுடன் வெளிவரும்.?

Written By:

பெரும்பாலான ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் சாதனங்களை ஆ0ண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஓஎஸ்-தனிற்கு மேம்படுத்தப்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் போது, கூகுள் அதன் அடுத்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓஎஸ்-ன் அதிகாரப்பூர்வ பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட ஒரு புதிய அறிக்கையானது வெளியாகும் அடுத்த என்ன பெயரில் அறிமுகமாகும் மற்றும் அது என்னென்ன மேம்பாடுகளுடன் வெளிவரும் போன்ற தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மே மாதத்திற்கு பின்னர்

மே மாதத்திற்கு பின்னர்

வெளியான தகவலின்கீழ் அடுத்த ஆண்ட்ராய்டு ஆனது ஒரியோ அல்லது வேறு ஏதாவது 'ஓ' எனத் தொடங்கும் பெயர் கொண்டு இருக்கும் என்று கூறுகிறது. மேலும் இந்த அடுத்த அப்டேட் ஆனது 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், அதாவது மே மாதத்திற்கு பின்னர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பி லெஸ்

காப்பி லெஸ்

மேலும் வரவிருக்கும் கூகுள் அப்டேட்டின் மேம்படுத்தல்கள் ஆப்பிள் போன்றிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக, கூகுள் வெளிப்படையாக காப்பி லெஸ் என்றவொரு பயன்பாடு சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறதாம்.

ஸ்டாண்டார்ட் இஸ்ஷூ விர்ச்சுவல் கீப்போர்ட்

ஸ்டாண்டார்ட் இஸ்ஷூ விர்ச்சுவல் கீப்போர்ட்

இதன் மூலம் ஒரு பயன்பாட்டில் இருந்து டெக்ஸ்ட்களை நகலெடுக்கும் தொல்லை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தில் கூகுளின் ஸ்டாண்டார்ட் இஸ்ஷூ விர்ச்சுவல் கீப்போர்ட் ஆப் சேர்க்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் இல்லை.

கூகுள் மேப்ஸ் மூலமாக

கூகுள் மேப்ஸ் மூலமாக

கூகுள் அதன் பயனர்களுக்கு மேலுமொரு சிறப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதன் ஒரு அம்சமாக கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் மூலமாக நேரடியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் பெரும் முறை சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே மேம்படுத்தல் ஜிமெயிலும் இடம் பெறலாம். இந்த அம்சங்கள் ஏற்கனவே ஐஓஎஸ்-ல் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

விரல் சைகைகள்

விரல் சைகைகள்

மேலும் பயனர்கள் விரல் சைகைகள் பயன்படுத்தி தங்கள் ஸ்மார்ட்போன்களின் செயல்களை கட்டுப்படுத்தும் ஒரு அம்சமும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெளியான அறிக்கை ஒரு உத்தியோகபூர்வ கருத்துகள் கொண்டதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆண்ட்ராய்டு போன்களை கூகுள் பிக்சல் போன்கள் போன்று மாற்ற எளிய வழிகள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Leaked: Android 8.0 to include these upgrades. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot