ரூ. 4,999 விலையில் Lava Z1 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே முந்துங்கள்..

|

லாவா இசட் 1 (Lava Z1) இப்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இப்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தின் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது. மலிவு விலையில் பெஸ்ட்டா ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த லாவா இசட் 1 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

காரணம்

காரணம் இதன் விலை எதிர்பார்த்திடாத அளவிற்கு மிகவும் மலிவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "மேட் இன் இந்தியா" ஸ்மார்ட்போன் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ப்ளூ மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் வருகிறது, இதன் விலை வெறும் ரூ .4,999 மட்டுமே.

லாவா

லாவா சமீபத்தில் தனது புதிய வரம்பான இசட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. லாவா இசட் 1, லாவா இசட் 2, லாவா இசட் 4 மற்றும் லாவா இசட் 6 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல் தற்பொழுது Z சீரிஸ் மாடலின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை லாவா இசட் 2, லாவா இசட் 4 மற்றும் லாவா இசட் 6 ஆகியவை அமேசானில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?

அதனைத்

அதனைத் தொடர்ந்து இன்று முதல் வாடிக்கையாளர்கள் லாவா இசட் 1 ஸ்மார்ட்போனையும் அமேசான் வழியாகவும் மற்றும் லாவா மொபைல்ஸ்.காம் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாகவும் வாங்கிக்கொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா இசட் 1 விவரக்குறிப்புகள்

லாவா இசட் 1 விவரக்குறிப்புகள்

 • 1 5' இன்ச் 480 × 854 பிக்சல் கொண்ட டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
 • இராணுவ தர சான்றிதழ்
 • 1.8GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 20 சிப்செட்
 • 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
 • மைக்ரோ எஸ்.டி உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 10 கோ உடன் எக்ஸ்ஓஎஸ் 6.2
 • கேமரா அமைப்பு

  கேமரா அமைப்பு

  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா
  • 5 மெகாபிக்சல் செல்பி கேமரா
  • டூயல் =-எல்இடி ஃபிளாஷ்
  • டூயல் 4 ஜி VoLTE
  • Wi-Fi 802.11 b / g / n (2.4GHz)
  • புளூடூத் 5.0
  • ஜி.பி.எஸ், மைக்ரோ யூ.எஸ்.பி
  • 3100 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Lava Z1 smartphone now officially goes on sale in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X