Home
News

மிரட்டிவிட்டாப்ல.. வெறும் ரூ.9499-க்கு இப்படி ஒரு 5G Mobile-ஆ? படு ஜோரா விற்பனையில்.. எந்த போன்? என்ன மாடல்?

லாவா (Lava) நிறுவனம் இந்தியாவில் இப்போது மிகமிக குறைந்த விலையில் பல அற்புதமான 5ஜி மொபைல் (Low price 5G mobile) சாதனங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனம் தான் லாவா யுவா 2 5ஜி (Lava Yuva 2 5G) என்ற மலிவு விலை ஸ்மார்ட்போனாகும். வெறும் ரூ. 10,000 விலைக்குள் சாமானியர்கள் கூட 5ஜி அனுபவத்தை அனுபவிக்க முடியும் அட்டகாசமான போனை லாவா தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

புதிய லாவா யுவா 2 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 6.67″ இன்ச் அளவு கொண்ட 1612 × 720 பிக்சல் (pixels) HD+ LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் 700 வரையிலான பீக் பிரைட்னஸை (nits peak brightness) வழங்குகிறது. இந்த போனின் டிஸ்பிளே க்ரிஸிபி கிளியர் ஆக இருக்கிறது.

Lava Yuva 2 5G மிரட்டிவிட்டாப்ல.. வெறும் ரூ.9499-க்கு இப்படி ஒரு 5G Mobile-ஆ?

மிரட்டிவிட்டாப்ல.. வெறும் ரூ.9499-க்கு இப்படி ஒரு 5G Mobile-ஆ?

இந்த லாவா 5ஜி மொபைல் (Lava 5G Mobile) ஆக்டா கோர் யுனிஸாக் T760 சிப்செட் உடன் (UNISOC T760 chipset) இயங்குகிறது. இது 4GB LPDDR4x ரேம் (RAM) உடன் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் (internal storage) ஆதரவை பெறுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இதில் 512GB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD) மெமரி அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய லாவா யுவா 2 5ஜி (Lava Yuva 2 5G) ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் டூயல் சிம் கார்டு (Dual SIM card) ஆதரவை பெறுகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த புதிய Lava Yuva 2 5G சாதனம் 50MP பிரைமரி ரியர் கேமராவுடன் 2MP Ai கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.

லாவா யுவா 2 5ஜி மொபைல் (Lava Yuva 2 5G Mobile):

இது டூயல் ரியர் கேமராவுடன் (dual rear camera) LED பிளாஷ் (LED flash) அம்சத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் இந்த சாதனம் 8MP செல்பி கேமராவை (selfie camera) கொண்டுள்ளது. இதில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (fingerprint scanner), 3.5mm ஆடியோ ஜாக் (Audio Jack) உடன் FM ரேடியோ (Radio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo speaker) ஆதரவுகளை லாவா நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த லாவா யுவா 2 5ஜி மொபைல் (Lava Yuva 2 5G Mobile) 5G SA / NSA (n1/n3/n5/n8/n28/n40/n41/n77/n78 bands) பேண்ட் இயக்கத்துடன், 4G VoLTE, வைஃபை (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் (Bluetooth 5.2), ஜிபிஎஸ் + க்ளோனஸ் (GPS + GLONASS), USB Type-C அம்சங்களை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரி (battery) உடன் 18W சார்ஜிங் ஆதரவை பேக் செய்துள்ளது.

லாவா யுவா 2 5ஜி மொபைல் விலை (Lava Yuva 2 5G Mobile Price):

புதிய லாவா யுவா 2 5ஜி (Lava Yuva 2 5G) விலை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 9,499 என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது தற்போது மார்பில் பிளாக் மற்றும் மார்பில் வைட் நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இந்த போனிற்கு 1 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்காத டூர் ஸ்டேப் சர்வீஸ் சேவையை லாவா வழங்குகிறது. அதாவது வீடு தேடி வந்து போனின் கோளாறுகள் சரி செய்யப்பட்டு சர்வீஸ் செய்து தரப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Yuva 2 5G Mobile Price Pinned To Rs 9499 Check Specifications and Sale Details Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X